உட்கட்சி பூசலால் காங்., கட்சிக்கு தொகுதியை தாரை வார்த்த தி.மு.க., கடலுாரில் நிர்வாகிகள் 'அப்செட்'
கடலுார்: சொந்த கட்சி நிர்வாகிகளின் கோஷ்டி பூசலை சமாளிக்க முடியாமல், 14 முறை தொடர்ச்சியாக போட்டியிட்ட கடலுார் தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, தி.மு.க., தலைமை தள்ளிவிட்டதால் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலுார் தொகுதியில் கடந்த, 1951ம் ஆண்டு தேர்தல் முதல் 2021ம் ஆண்டு தேர்தல் வரை 16 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன.
அதில் கடந்த, 1962 ம் ஆண்டு முதல் தி. மு. க., கடலுார் தொகுதியில் 14 முறை நேரடியாக போட்டியிட்டு, 8 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்., கட்சியும் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த, 4 தேர்தல்களில் தி. மு. க., அ. தி. மு. க., நேரடியாக மோதியதில் இரண்டும் தலா 2 முறை வெற்றி பெற்றன.
அ. தி. மு. க., சார்பில் இந்த தொகுதியில் கடந்த, 3 தேர்தல்களில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சம்பத் நான்காவது முறையாக களம் காண்கிறார்.
தி. மு. க. வில் அய்யப்பன் எம். எல். ஏ., உட்பட, 10க்கும் மேற்பட்டோர் கடலுார் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தனர். ஆனால் கடலுார் மாநகரில், அய்யப்பன் எம். எல். ஏ., மாநகர செயலாளர் உட்பட பல கோஷ்டி பூசல்கள் பொதுவெளியில், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தலைமை பலமுறை அறிவுறுத்தியும் பூசல்கள் தீரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தலைமை பூசல்களை தவிர்க்க கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு தொகுதியை ஒதுக்கி நேற்று அறிவித்தது.
இதனால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நேரடியாக தேர்தல் களத்தில் இருந்த தி. மு. க., இம்முறை கூட்டணி கட்சிக்கு வேலை பார்க்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தி. மு. க., முக்கிய நிர்வாகிகள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!