முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில், கடந்த தேர்தலில் தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்று அமைச்சராக இருந்து வருகிறார். போக்குவரத்து துறை அமைச்சர், அதன்பின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் என பணியாற்றிய இவர், தற்போது வனத்துறை அமைச்சராக உள்ளார்.
தி.மு.க.,வில் நான்கு முறை துறை மாற்றப்பட்ட ஒரே அமைச்சர் ராஜ கண்ணப்பன் தான். பல சர்ச்சைகளிலும் சிக்கியவர்.
இவருக்கும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ.,வான தி.மு.க., மாவட்ட செயலர் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திற்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது.
இவர் ஐந்து ஆண்டுகளில், கிராமங்களுக்கு பயணியர் நிழற்குடை, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்துள்ளார். சிக்கல், தனி ஒன்றியமாக அறிவிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை.
மேலும் இவர் சொன்ன, பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், தன் சமுதாயமான யாதவர் ஓட்டுகளை நம்பி மீண்டும் போட்டியிடுகிறார்.
தற்போது அ.தி.மு.க., சார்பிலும் அவரது சமுதாயத்தை சேர்ந்த முதுகுளத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., 'மலேஷியா' பாண்டி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், காங்., சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்அ.தி.மு.க.,விற்கு தாவியவர்.
ராஜ கண்ணப்பனும், பாண்டியும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஓட்டுகள் இரண்டாகப் பிரியும் நிலையுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் அ.ம.மு.க., இருப்பதால் அக்கட்சியின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,விற்கு கிடைக்கும்.
பாண்டி சொந்த தொகுதியைச் சார்ந்தவர். இருவரும் தமது சமுதாயத்தை சார்ந்த ஓட்டுகளை நம்பி களமிறங்கும் நிலையில், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஓட்டுகள் யாருக்கு விழுகிறதோ அதை பொறுத்து வெற்றி தீர்மானமாகும்.
பிளாஸ்டிக் சேர் புகழ் கண்ணப்பனா?
நாடு நாசமாவதைப்பற்றி கவலை இல்லை.. எங்களை யாரு தாஜா பண்ணுறாங்களோ, புகழ்ந்து பேசுறாங்களோ, காஃபி ருங்களை இகழ்ந்து பேசுறாங்களோ அவங்களுக்கே ஓட்டு....
முஸ்லீம்கள் மத ரீதியாக ஒட்டுமொத்தமாக வாக்களித்தால் அது மத சார்பின்மை. ஹிந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும் என்று சொன்னாலே அது மதத்தீவிரவாதம்.
சீமான் அவர்கள் சொன்னதை போல என்றைக்கு தமிழக சிறுபான்மையினர் மொத்தமாக திமுகவிற்கு ஓட்டு போடுவதை நிறத்துகிறார்களோ அன்று தான் இந்த மதபிரச்சனைகள் இலவசங்கள் டாஸ்மாக் கரெப்ஷன் என எல்லாம் ஒழிக்கப்பட்டு அரசியல் சூழலும் மாற்றம் கண்டு தமிழகமும் கூடவே அடிமட்ட தமிழினமும் முன்னேற்றம் அடையும்...யோசிப்பார்களா.... அல்லது ஜமாத்திலும் சர்ச்சுகளிலும் சொல்லப்படுவதை கேட்பார்களா என்பதை காலம் தான் சொல்லும்...மேலும்
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?