கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
துாத்துக்குடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இறுதி பட்டியல் தயாராகும் வரை, அவரது பெயர் இடம்பெறாமல் இருந்துள்ளது.
அதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கடம்பூர் ராஜு, சண்முகநாதன் இருவரும், 'செல்லப்பாண்டியன் கிறிஸ்துவ நாடார். ஹிந்து நாடார் ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் நிச்சயமாக வெல்லலாம்' என, பொதுச்செயலர் பழனிசாமியிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நெருக்கடியால், முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் பெயர் இறுதி செய்யப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், வேட்பாளர் அறிவிப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்தான், செல்லப்பாண்டியன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியினர் கூறுகையில், 'தென் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் கிறிஸ்துவ நாடார் யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றால் பின்னடைவை சந்திக்க நேரிடும் என, சி.எஸ்.ஐ., டயோசீசன் நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.க., தலைமையிடம் எடுத்துக் கூறினர். அதன்பின் தான், அவர் பெயர் சேர்க்கப்பட்டது' என்றனர்.
பெரியார் , திராவிடர் கழகம் என்று ஒருதலைப்பட்சமான நாத்திகம் பேசும் மக்களை காணோம்மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 அதிகரிப்பு
-
வேலூரில் முதல்வர் ஸ்டாலின்; வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு
-
தமிழக சட்டசபை தேர்தல்; பாஜ தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு
-
டில்லியில் துணை ஜனாதிபதி சிபிஆர் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
-
அனல் பறக்கும் அரசியல் கள நிலவரம் என்ன; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சினிமாவில் நடிக்க சிதம்பரம் மகனுக்கு ஆசை