செங்கோட்டையன் முதல் தூசி மோகன் வரை... தவெக பட்டியலில் இடம்பிடித்த மாற்றுக்கட்சியினர்
சென்னை: சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியான நிலையில், அதில், மாற்றுக்கட்சியில் இருந்து வந்த அனைவருக்கும் சீட் கொடுத்து தாராளம் காட்டியுள்ளார் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்.
சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் காணும் விஜய் தலைமையிலான தவெகவின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக, திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன் (கோபி) , சத்யபாமா (ஈரோடு வடக்கு), நிர்மல்குமார் (திருப்பரங்குன்றம்) , கு.ப.கிருஷ்ணன் (லால்குடி), தூசி மோகன் (செய்யாறு) , விஎஸ் பாபு (கொளத்தூர்), ஜேசிடி பிரபாகர் (ஆயிரம் விளக்கு), ஸ்ரீதர் (வால்பாறை தனி) , ரெட்டியார்பட்டி நாராயணன் (நாங்குநேரி), திருப்பதி (திருப்பத்தூர்), கவிதா ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), சுப்ரமணியன் (கந்தர்வகோட்டை), கருப்பையா (சோழவந்தான்), முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் (ராசிபுரம்) உள்ளிட்டோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதியை அமமுகவுக்கு ஒதுக்கியதை எதிர்ப்பு தெரிவித்து, நாங்குநேரி முன்னாள் எம்எல்ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் அதிமுகவில் இருந்து அண்மையில் விலகி, தவெகவில் இணைந்தார். இவர் தற்போது தவெக சார்பில் நாங்குநேரியில் போட்டியிடுகிறார்.
திமுகவின் கைப்பாவையாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செயல்படுவதாக குற்றம்சாட்டிய டி.செல்வம், தவெக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதியை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேபோல, அதிமுகவில் இருந்து வந்த விஎஸ் பாபு, கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களம் காண்கிறார்.
அதிமுக சார்பில் போட்டியிடுவதாக இருந்த செய்யாறு தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ தூசி மோகன், இரு தினங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட உடனடியாக தவெகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, திமுகவின் முக்கிய ஆதரவாளரும், அரசு டெண்டர்களை எடுத்து நடத்தி வந்த தொழிலதிபருமான ஆர்.எஸ்.மோகனுக்கு, தவெக சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்து, முதல்வர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படாத நிலையில், தவெகவுக்கு தாவினார்.
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை தவிர்த்து, அக்கட்சியின் தலைவர் விஜய் உள்பட மற்ற வேட்பாளர்கள் அனைவரும் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
உதவியாளரின் மகன்
விஜய் அறிவித்த தவெக வேட்பாளர்களில் ஒருசிலர் அதிக கவனம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர், விஜய்யின் உதவியாளரான ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அப்செட்
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முன்பே இறங்கி வேலை செய்து வந்த அஜிதாவுக்கு தவெக வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக விஜயின் நண்பரும், நடிகருமான ஸ்ரீதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி தவெகவினர் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் கட்சியில் விஜய் ஒருவரைத்தவிர மற்ற அனைவருமே பிற கட்சியிலிருந்து தாவியவர்கள்தான்.
ஒட்டு பிரிக்க சரியாக தேர்ந்தேடுத்துள்ளார். சில இடத்தில் எடப்படியாரின் ஜால்ராக்களுக்கு வீட்டு சில இடங்களில் தீ யா முக்கவின் ஒட்டு பிரியும். நாம் வேடிக்கையயை பார்ப்போம். யார் ஜெயித்தால் என்ன யார் தோற்றால் என்ன? நமக்கு அவர்களால் ஒரு பயனும் இல்லை. அவநவன்பொது பணத்திய சுரண்ட தான் செய்வான்.
விஜய் தன் கட்சி சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை (சீமான் போலவே அணைத்து தொகுதிகளுக்கும் ஓரே நேரத்தில் அறிமுகம் செய்த இரண்டாவது தலைவர்) அறிமுகபடுத்தும் முன்பு அறிவித்த தேர்தல் அறிக்கை புதுமையாக இருந்தது. அதில் இலவசங்கள் ஏதுமில்லை என்பதற்காக அவரை பாராட்ட வேண்டும். ஆனால் அவர் அறிவித்த அனைத்து உத்தரவாதங்கள் தற்போது படிக்கும் அல்லது படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்க கூடிய தொலைநோக்கு இருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. போட்டியிட வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள் என அனைவரும் எதிர்பார்த்ததை போல் வேறு கட்சியிலிருந்து வந்த சிலருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததோடு தனது கட்சி நிர்வாகிகள் பலருக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததை பாராட்ட வேண்டும். வேட்பாளர்கள் சாமானயவராகளாக புதியவர்களாக இருந்தாலும் அவர்கள் அந்த தொகுதிக்குள் இருப்பதால் மக்களுக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உப்புமா கட்சிக்கு இத்தனை ஹைப் தேவையில்லை என நினைக்கிறேன்.....
எம்ஜிஆர் அமைச்சரவையில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்து பல லட்சம் கோடிகள் (இன்றைய மதிப்பு பல மடங்கு) ஊழல்கள், லஞ்சங்கள் அசையும் அசையா சொத்துக்கள் குவித்தவர் கே.ஏ.செங்கோட்டையன் என அரசியல்வாதிகள் அனைவருக்கும் தெரியும். ஜோசப் விஜயின் பெரும்பாலான அசையும் சொத்துகளை சுவாகா செய்துவிடுவான்.
விஷ ஜந்துக்கள் பெருகி விட்டன. முளையிலே கிள்ளிவிட வேண்டும். 1960 - களில் கிள்ளியிருந்தால் இந்த மாநிலம் காப்பாத்தப்பட்டு இருக்கும் . பெருந்தலைவர் காமராஜ் அதை செய்யவில்லை. வரலாற்று பிழையாகி விட்டது .மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!