சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: வெள்ளகுளத்தில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வெள்ளகுளம் தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் வெள்ளகுளம் தெருவில், சந்தவெளியம்மன் கோவில், சற்குரு சிவசாமி சித்தர் கோவில் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், இத்தெருவில் உள்ள மும்முனை சாலை சந்திப்பில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது.

ஒரு வாரமாக வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

எனவே, வெள்ளகுளம் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement