தி.மு.க., அ.தி.மு.க.,வில் 'நோ' சீட் :மாவட்டத்தில் பெண்கள் அதிருப்தி
கடலுார்: மாவட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வில் போட்டியிட வாய்ப்பு பெண்களுக்கு வாய்ப்பு வழங்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் என, 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் தி.மு.க.,வில் குறிஞ்சிப்பாடியில் அமைச்சர் பன்னீர்செல்வம், திட்டக்குடியில் அமைச்சர் கணேசன், நெய்வேலியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., புவனகிரியில் சரவணன் என, 4 பேர் போட்டியிடுகின்றனர். மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க., வேட்பாளர்களாக கடலுாரில் முன்னாள் அமைச்சர் சம்பத், பண்ருட்டியில் மோகன், குறிஞ்சிப்பாடியில் புவனேந்திரன், புவனகிரியில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., சிதம்பரத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ., நெய்வேலியில் மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், திட்டக்குடியில் முருகுமாறன் என, 7 பேர் போட்டியிடுகின்றனர்.
ஆனால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் இந்த இரு பிரதான கட்சிகளிலும் மாவட்டத்தில், அவர்களுக்கு எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
இது அந்தந்த கட்சியில் பெண் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் தி.மு.க., கூட்டணியில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளராக அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி, புவனகிரி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, கடலுார், விருத்தாசலம் என, 6 தொகுதியில் போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!