4 என்.ஆர்.காங்., நாராயணசாமிக்கு உழவர்கரையில் உற்சாக வரவேற்பு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் ஓட்டு சேகரித்த என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமிக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

உழவர்கரை தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி நேற்று காலை மேரி உழவர்கரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பூஜை செய்து வணங்கிவிட்டு, தனது பிரசாரத்தை துவக்கினார்.

தொடர்ந்து, மேரி உழவர்கரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகர், டைமன் நகர்களில் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது, முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் நேர்மையான முறையில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கியுள்ளது. முதியோர் உதவித்தொகை உயர்த்தியது. இலவச அரிசி திட்டம். மாணவர்களுக்கு லேப்டாப் என அரசின் திட்டங்களை எடுத்து கூறி ஓட்டு சேகரித்தார்.

ஓட்டு கேட்டு சென்ற நாராயணசாமியை, பொதுமக்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். அப்போது என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சிகளான பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement