பிளஸ் 2 மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? திருப்பூரில் ஏப். 4, 5ல் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி
திருப்பூர்:''அப்பாடா... ஒரு வழியாக பொதுத்தேர்வை நல்லா எழுதி முடிச்சாச்சு'' என கூறும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, 'அடுத்து என்ன படிக்கலாம், எந்த துறையை தேர்வு செய்யலாம்' என வழிகாட்டும் 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூரில் வரும், 4, 5ம் தேதிகளில் நடக்கிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தக்க நேரத்தில், தகுந்த ஆலோசனைகளை 'தினமலர்' நாளிதழ் வழங்கி, வழிகாட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சி வரும் ஏப். 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் இணைந்து வழங்குகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வ வித்யாலயா நிறுவனங்கள் உடன் கரம் கோர்க்கின்றன.
தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், 70க்கும் அதிகமான கல்லுாரிகள், பல்கலைகள் தங்கள் அரங்குகளை அமைக்கின்றன. அட்மிஷன், உயர்கல்வி வாய்ப்பு குறித்த பல்வேறு தகவல்கள், ஒரே இடத்தில் வழங்கப்படுகிறது. அரங்கில் நடைபெற உள்ள கருத்தரங்கில் நிபுணர்கள் பங்கேற்று, உயர்கல்வியின் மிகச்சமீபத்திய, 'அப்டேட்'களை அள்ளித்தருகின்றனர்.
சந்தேகங்களை நிபுணர்கள், பேராசிரியர்களிடம், கேட்டுத்தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். படிக்கும் போதே என்னென்ன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் டாப் துறைகள் எவையெவை, அரசு வேலைவாய்ப்புகள், 'நீட்' உள்ளிட்டவற்றுக்கும் விளக்கம் தரப்பட உள்ளது. மாணவர்கள் பங்கேற்று தெளிவாக முடிவெடுக்க இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்தரங்கின் இடையிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்படும். வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம்.
@block_B@ எல்லா சந்தேகங்களும் மாயமாகும் வழக்கமான பட்டப்படிப்புகள் வேண்டாம் என்போருக்கு புத்தம் புது படிப்புகள் குறித்த விளக்கம், அரசு வேலைவாய்ப்பு, 'நீட்' பிரத்யேக விளக்கம், மருத்துவம், இன்ஜினியரிங் தொழில்நுட்பம், ஏ.ஐ. ஆக்மென்டட் ரியாலிட்டி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோஷியல் மீடியா, பிக்டேட்டா, ரோபோட்டிக்ஸ், சட்டம், ஆடிட்டிங், வேளாண்மை, மேலாண்மை, அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒவ்வொரு உட்பிரிவுகள் குறித்தும் நிபுணர்கள் விளக்கமளிக்கின்றனர். வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்கள், உடனடி வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள், நீட், ஜே.இ.இ. தேர்வுகளில் சாதிக்க டிப்ஸ், என்ன படிப்புக்கு என்ன வேலை உள்ளிட்ட கேள்விகளுக்கு விடையளிக்கப்பட உள்ளது.block_B
மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!