மொபைல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் மொபைல்போன் கடையின் பூட்டை உடைத்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 பொபைல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய், 32. கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய சாலையில், மொபைல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். அங்கு, விற்பனைக்கு வைத்திருந்த, 15 மொபைல்போன்களை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement