பெங்களூரு, யாத்கிரில் பண்ணை குட்டையில் மூழ்கி 6 பேர் பலி 

நெலமங்களா: பெங்களூரு, யாத்கிரில் பண்ணை குட்டையில் மூழ்கி, ஆறு பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா பூசந்திரா கிராமத்தில் வசித்தவர்கள் சுரேஷ், 21, நரசேகவுடா, 22. நண்பர்களான இருவரும் நேற்று காலை, தங்கள் நண்பர்கள் மேலும் இருவருடன் சேர்ந்து, கிராமத்தில் உள்ள விவசாய பண்ணை குட்டையில் குளித்து கொண்டு இருந்தனர்.

ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷும், நரசேகவுடாவும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். மற்ற இருவரும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கி இருவரும் இறந்து விட்டனர். தகவல் அறிந்த நெலமங்களா போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு வந்து, இருவரின் உடல்களையும் மீட்டனர். நண்பர்கள் இருவரிடம் விசாரணை நடக்கிறது.

இதுபோல, யாத்கிர் சுராபுரா தாலுகா நாகனுார் கிராமத்தில் நேற்று காலை விவசாய பண்ணை குட்டையில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த கிரண், 6, பசம்மா, 11, சரத், 6, ஹனுமேஷ், 7 ஆகிய நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். விளையாடி முடித்த பின், கை, கால்களை கழுவ சென்ற போது, குட்டையில் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.

Advertisement