ரூ.10 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்
கொப்பால்: சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35.8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொப்பால் மாவட்டம், கொப்பால் தாலுகாவில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, உணவு பொது வினியோக துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மூட்டைகளுடன் வந்த லாரியை நிறுத்தினர். லாரியில் இருந்த மூட்டைகளில் அரிசி இருப்பதை உறுதி செய்தனர்.
லாரி ஓட்டுநர் கொடுத்த ரசீதை சரிபார்த்த போது, கொப்பால் தாலுகா கவுகனபள்ளியில் இருந்து மான்வியில் உள்ள வீரபத்ரேஸ்வரா அரிசி ஆலைக்கு சட்ட விரோதமாக கடத்தப்படும் ரேஷன் அரிசி என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து லாரி ஓட்டுநரை கைது செய்த அதிகாரிகள், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35.8 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, மான்வியில் உள்ள வீரபத்ரேஸ்வரா இண்டஸ்ட்ரீஸ் ரைஸ் மில் உரிமையாளர்கள் பசவனகவுடா ஹல்டால், வீரபத்ரேஸ்வரா ஹல்டால், ராய்ச்சூரை சேர்ந்த வெங்கட ரெட்டி, கொப்பால் தாலுகா கூக்கனப்பள்ளி மாயா டிரேடர்ஸ் உரிமையாளர் யமனுாரப்பா ஆகியோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சொந்த சின்னமா; உதயசூரியனா?
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்; ஈரானில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது
-
முதுகுளத்துாரில் முஸ்லிம்களால் கரையேறும் கண்ணப்பன்!
-
கடைசி நேரத்தில் சீட் கிடைத்த ரகசியம்!
-
துாய்மை பணியாளர்களை ஆசை காட்டி ஏமாற்றிய தி.மு.க.,
-
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறை; நள்ளிரவில் நடந்தது வழக்கு விசாரணை!