அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
கொல்கட்டா: தமிழகத்தோடு புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகின்றன. கடந்த, 14 ஆண்டுகளுக்கும் மேலாக, மேற்கு வங்க முதல்வராக பதவியில் உள்ளார், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி.
இந்த முறை நிச்சயம், பா.ஜ., தேர்தலில் வெற்றி பெற்று, மம்தாவை வெளியேற்றும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்புகிறார்.
இதனால் தமிழகத்தை விட மேற்கு வங்கத்தில் பா.ஜ., அதிக கவனம் செலுத்துகிறது. கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் மாநில தேர்தல்கள் இம்மாதம் 9ம் தேதி முடிந்துவிடும். அதன் பின் மேற்கு வங்கத்தில் இரண்டு வாரம் தங்கி, தேர்தல் வேலைகளை கவனிக்கப் போகிறாராம் அமித் ஷா.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் பிரச்சார கூட்டங்கள், ரோடு ஷோ ஆகியவற்றிற்கு தேதிகளை பா.ஜ., முடிவு செய்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் பலர் இங்கு பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்கத்தை ஒன்பது பிரிவுகளாக பா.ஜ., பிரித்துள்ளது. ஒவ்வொரு பிரிவும், ஒவ்வொரு மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மூத்த தலைவர்கள் தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங், நித்யானந்த் ராய், நிஷிகாந்த் ராய் ஆகியோருடன், உ.பி., பீஹார், சத்தீஸ்கர், திரிபுரா மாநிலங்களிலிருந்தும், பா.ஜ., தலைவர்கள் மேற்கு வங்கத்தில் முகாமிட்டு உள்ளனர். 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன், மட்டன், முட்டை ஆகியவை தடை செய்துவிடுவர்; உங்களால் சாப்பிட முடியாது' என்று, சகட்டு மேனிக்கு பிரச்சாரம் செய்து வருகிறார், மம்தா.
'அடுத்த பா.ஜ., முதல்வர் அசைவ உணவு பிரியர்' என்று பா.ஜ., தரப்பில் பதில் பிரச்சாரமும் செய்யப்படுகிறது.
இதற்கிடையே, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வேறு, மம்தா அரசை கடுமையாக கண்டனம் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் நியமித்த அதிகாரிகளை, மம்தா கட்சியினர் சிறைபிடித்தனர். இதை கண்டித்த உச்ச நீதிமன்றம், இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, மம்தாவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமி த் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
வாசகர் கருத்து (21)
Gnana Subramani - Chennai,இந்தியா
05 ஏப்,2026 - 19:50 Report Abuse
இன்று வரை அமித் ஷா தேர்தல் பொறுப்பாளராகத் தான் செயல் பட்டு வருகிறார். எப்போது உள்துறை அமைச்சர் என்று உணர்ந்து வேலை செய்வார். 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
05 ஏப்,2026 - 14:21 Report Abuse
2026 மே 5தேதி தொடங்கி இன்னும் 100 வருடங்களுக்கு WB ல் BJP ஆட்சி தொடரப்போவது உறுதி. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
05 ஏப்,2026 - 11:09 Report Abuse
எங்காவது முதல்வரே ரவுடித்தனம் செய்பவர் என்றால் முன்னேற்றம் சாத்தியமா? 0
0
GSR - Coimbatore,இந்தியா
05 ஏப்,2026 - 16:24Report Abuse
அடங்கியது போக...இன்னும் ரெண்டு பேர் இருக்கிறார்கள்...விரைவில் .... கடவுள் இருக்கான் , குமாரு..... 0
0
Reply
Mario - London,இந்தியா
05 ஏப்,2026 - 09:33 Report Abuse
கண்டிப்பா ஏறாது 0
0
T.sthivinayagam - agartala,இந்தியா
05 ஏப்,2026 - 10:02Report Abuse
அதர்மம் நீண்ட காலம் நிலைக்காது. 0
0
Reply
S A - ,இந்தியா
05 ஏப்,2026 - 08:31 Report Abuse
என்னவென்றே தெரியாமல் சொம்பு் அடிக்க கூடாது. 0
0
Reply
GMM - KA,இந்தியா
05 ஏப்,2026 - 08:21 Report Abuse
மேற்கு வங்கத்தில் அச்சமின்றி வாக்களிக்க முடியாது. மம்தா கட்சி தவிர பிறர் வெற்றி மீது நம்பிக்கை கொள்ள முடியாது. அமுலாக்க அதிகாரிகள், நீதிபதிகள் சிறை வைக்கும் மாநிலம். உச்ச நீதிமன்றம் தன் தீர்வு அதிகாரத்தை நிர்வாக அதிகாரமாக மாற்றி சட்ட குழப்பம் ஏற்படுத்தி விட்டது.
டாக்டருக்கு நோயாளிகள் வேண்டும். வழக்கறிஞருக்கு வழக்கு வேண்டும். தமிழகம், மேற்கு வங்கம் உச்ச நீதிமன்றம் ஓய்வு இன்றி இயங்க உதவி புரிந்து வருகிறது. மேற்கு வங்க மொத்த மாநில நிர்வாகம் மம்தா கீழ். மம்தா அரசியல் ரவுடிகள் கீழ்.
தற்போது தேர்தல் நடத்த உகந்த மாநிலம் மேற்கு வங்கம் அல்ல. பிஜேபி வென்றாலும் வழக்கு, வன்முறையை எதிர் கொள்ள வேண்டும். ஊடுருவிய அமைதி மார்க்கம் ஜனாதிபதி ஆட்சி அமைக்காமல் வெளியேற்றுவது கடினம். 0
0
Reply
பாலாஜி - ,
05 ஏப்,2026 - 08:15 Report Abuse
அமித்ஷாவின் முயற்சிகள் மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் எந்த ஆண்டிலும் பலனளிக்காது. 0
0
vivek - ,
05 ஏப்,2026 - 09:28Report Abuse
அதை அண்டா வாங்கிய பாலாஜி சொல்ல கூடாது 0
0
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
05 ஏப்,2026 - 09:34Report Abuse
மாற்றம் கொண்டுவர தேர்தல் அரசியல் பலனளிக்காது... முதலில் சிறு சிறு மாநிலங்களாக பிரித்து,பின் எல்லைகளை மூடி சீல்வைத்து துணை ராணுவப் படையினர் மூலம் தேச பற்று ஒருமைப்பாடு என்றால் என்ன என்று பாடம் நடத்தினால் மட்டுமே பலனளிக்கும்... இரத்தம் சிந்தாமல் பட்டினியால் பெற்ற சுதந்திரம் இந்த லட்சணத்தில் கேவலமாகத்தான் இருக்கும்... சாணக்கியர் சொல்வது போல அரசன் என்றும் இன்முகத்தை மட்டுமே காட்டுவான் என்ற நம்பிக்கையை விட, கோபமுகம் பற்றிய பயமும் மக்களிடையே இருப்பது அவசியம்.. 0
0
S. Venugopal - Chennai,இந்தியா
05 ஏப்,2026 - 11:34Report Abuse
இந்த மூன்று மாநிலங்களிலும் ஒரு ஒற்றுமை என்னவென்றால். இந்த மாநிலங்களில் கடந்த பல ஆண்டுகளாக பெரும்பாலான நன்றாக படித்து திறமையிணை வளர்த்துக்கொண்டவர்கள் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் புழைப்புக்கு சென்றுவிட்டார்கள். இந்த மாநிலங்களில் வேலைக்கு வெளியிடங்களிலிருந்து வந்தவர்கள் தான் அதிகமானவர்கள். தற்பொழுது நிலை வேறு. வெளிமாநிலங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்து விட்டது வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் குறைந்து விட்டது. ஆகவே இந்த மாநிலங்களில் இளைஞர்களின் மனநிலைக்கும் வேலை வாய்ப்பினை பொறுத்தும் மாற்றங்கள் கூடிய விரைவினில் ஏற்படும். இளைஞர்கள் மாற்றத்தினை எதிர்நோக்கி உள்ளனர் என்பதினை காணமுடிகிறது. 0
0
Reply
SUBBU,MADURAI - ,
05 ஏப்,2026 - 08:10 Report Abuse
West Bengal Total Assembly seats: 294. Majority mark: 148. 2021 results: TMC 213 seats. BJP 77 seats. But headlines hide the real story the battle is in swing seats 0
0
Reply
குல்கர்னி, மிட்னாபூர் - ,
05 ஏப்,2026 - 08:09 Report Abuse
கள்ள குடியேறி கள் எந்த கிரிமினல் குற்றம் புரிந்தாலும் போலீஸ் கை கட்டி சேவகம் செய்யும். எனவே பா ஜ க கரை சேர்வது கடினம். வலிமைமிக்க எதிர்கட்சியாக வரலாம் 0
0
Gnana Subramani - Chennai,இந்தியா
05 ஏப்,2026 - 19:53Report Abuse
கள்ளக் குடியேறிகளை தடுக்கும் எல்லா பாதுகாப்பு படை அமித் ஷா பொறுப்பில் உள்ளது. ராணுவம் ராஜ்நாத் சிங் வசம் உள்ளது. இவர்கள் ஏன் தடுக்க வில்லை 0
0
Reply
SUBBU,MADURAI - ,
05 ஏப்,2026 - 08:06 Report Abuse
சமீபத்தில் மம்தா பானர்ஜி அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. 1. தேசிய நெடுஞ்சாலை
12 (NH 12) வழியாகச் செல்ல முயன்ற பாதுகாப்பு ராணுவ வாகனங்களை, மம்தாவின் மூர்க்க தீவிரவாதக் கும்பல் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை.
2. ஏப்ரல் 1 ம் தேதி, மால்டா மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றபோது, 7 நீதித்துறை அதிகாரிகள் பல மணி நேரம் மம்தாவின் திரிணாமுல் கட்சியின் குண்டர்களால் முற்றுகையிடப்பட்டனர். 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டி; தந்தைக்காக விட்டுக்கொடுத்தார் மகன்
-
அரசு பஸ்சில் தவெக விளம்பரம்; மென்பொருளை 'ஹேக்' செய்து விட்டதாக நிர்வாகம் தகவல்
-
சனாதன தர்மத்தை மதிப்போருக்கு வாக்களியுங்கள்; ஹரிஹர முத்தைய்யர்
-
சாத்தான்குளம் வழக்கு; போலீசார் 9 பேருக்கான தண்டனை இன்று அறிவிப்பு
-
தேசமே முதன்மை என்ற கொள்கையுடன் தொடர்ந்து உழைப்போம்; பிரதமர் மோடி
-
தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 குறைவு
Advertisement
Advertisement