சட்டசபைக்கு போட்டி; திருமா திட்டம் என்ன?
நமது சிறப்பு நிருபர்
தமிழக அரசியல்வாதிகளில் மெத்தப் படித்தவராக அறியப்பட்ட ஒருவர் திருமாவளவன். எந்த ஒரு முடிவையும், தீர யோசனை செய்த பிறகு தான் எடுப்பார்; எடுத்த முடிவிலும் உறுதியாக இருப்பார். இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவு, சராசரிக்கும் கீழான அரசியல்வாதிகளைப் போலவே இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
பொதுவாக, சராசரி அரசியல்வாதிகள், உள்ளூர் தேர்தல் முதல் உலகத் தேர்தல் வரை, எந்த ஒரு தேர்தல் வந்தாலும், அதில் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தே தீர வேண்டும் என்று ஆசைப்படுவர்; அது போன்றதாக இருக்கிறது திருமா இப்போது எடுத்துள்ள முடிவு. இப்போது அவர் சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்.பி., ஆக இருக்கிறார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கின்றன.
அப்படியிருக்கையில், இப்போது நடக்கும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார் திருமா. அவர் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் பட்சத்தில், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கும். ஏன் இத்தகைய ஒரு தேவையற்ற பிரச்னையை உருவாக்குகிறார் திருமா? அவரது நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
ஒருவேளை தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்கள் காரணமாக தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும்; அத்தகைய சூழ்நிலையில் தான் சட்டசபையில் எம்எல்ஏவாக இருப்பது முக்கியம் என்று திருமா கருதுகிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் லட்சியத்தை நோக்கிய பயணமாகவே அவரது இந்த முடிவு இருக்கிறது என்கின்றனர் கட்சியினர். தான் கேட்ட எண்ணிக்கையில் சட்டசபை தொகுதிகளை கொடுக்காமல், இழுத்தடித்து, மனதை நோகடித்த திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்கத்துடன் திருமா இந்தத் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார் என்கின்றனர் அவரது கட்சியினர். திருமா திட்டம் நிறைவேறுமா, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்குமா என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று உறுதியாக தெரிந்து விடும்.
@block_P@
கடந்த 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார் திருமா. ஆனால் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே ராஜினாமா செய்து விட்டார். தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வென்றது பற்றி, திமுக தரப்பில் கிண்டலாக ஏதோ கூறியதால் பதவியை ராஜினாமா செய்தார். எனவே அவருக்கு ராஜினாமா செய்வது புதிதல்ல என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.block_P
@block_G@
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் சிவி சண்முகம் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் காலியாகும் அந்த இடத்தை, சட்டசபையில் பெரும்பான்மை எம்எல்ஏக்களை கொண்டுள்ள கட்சி பூர்த்தி செய்து விடும். எனவே அரசுக்கு வெட்டிச் செலவு என்பது இல்லை. ஆனால் லோக்சபா இடைத்தேர்தல் என்பது அப்படி அல்ல.
அரசுக்கு பல கோடி ரூபாய் வெட்டிச் செலவை ஏற்படுத்தக் கூடியது.block_G
திமுக, அதிமுக என்று எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அமைச்சராக திருமா உறுதி பூண்டுள்ளார்.
தப்பித் தவறிகூட திருமா மந்திரியாகக் கூடாது என்று மக்கள் தீர்மானித்து, அவரைத் தோற்கடிக்க வேண்டும்.
அவர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், அல்வா வியாபாரி சத்யராஜிடம் திருமாவுக்கு அல்வா கொடுக்கச் சொல்வார் ஸ்டாலின்.
ஓட்டை பானை எதுக்கும் உதவுவது. அப்படி ஒரு நிலை வந்தால் திமுகவோ அதிமுகவோ இவர்கள் கட்சி MLA விலைக்கு வாங்கீடுவாங்க, இல்லை அவங்களே வந்துடுவாங்க. தனிமரம் வழக்கம் போல கட்ட பஞ்சாயத்து தான் செய்ய வேண்டும், தோழமை சுட்டல் கூட செய்ய முடியாது
தொல் .திருமாவளவன் செய்வது மிகப்பெரிய தவறு. ஆளூர் ஷாநவாஸ் மிக குதியான ஓர்உ சட்டமன்ற உறுப்பினர். அவருக்கு வாய்ப்பு தராமல், ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் இவர், சட்டமன்றத்திற்கு போட்டி போடுவது தேவை இல்லாத செயல்...... இவர் வென்றபின்பு ன்ன செய்ய போகிறார் என்பதை முதலில் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். வென்றபின்பு MP பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்றால், நிச்சயம் அவரது VCK கட்சி, அந்த தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட கூடாது.
திருமா.. என்ன திட்டம் போட்டு சட்டசபை தேர்தலில் நின்றாலும் திமுக காரங்க மனம் உவந்து ஓட்டு போட்டால் தான் வெற்றி..
திருமால்வளவன் தலைகீழ் நின்றாலும் மந்திரிசபையில் சேர்க்கமாட்டார் ஸ்டாலின். வயதாகிவிட்டதால் டெல்லி தட்பவெப்பநிலை உடம்புக்கு ஏற்புடையதாக இல்லை . அவருக்கு மொழியும் ஒரு பிரச்சனை .மெத்தபடித்தவர் என்று சொல்கிறார்கள் . இதுவரை அவரின் ஆங்கில பேச்சு கேட்கவில்லை .ஆகவே குண்டுச்சட்டியில் குதிரை மேய்க்க போகிறார் .
பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டசபைக்கு போட்டி இட்டால் அரசுக்கு நஷ்டம் . மீண்டும் தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயம் . அப்படி பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அந்த எம் பி யிடமிருந்து தேர்தல் சிலவுகள் வசூல் செய்யவேண்டும் . மேலும் அவர்களது பென்ஷன் நிறுத்தப்படவேண்டும் . மேலும் ஒருவரே இரண்டு தொகுதிகளில் நிற்பதும் தடை செய்யவேண்டும் . அனைத்து லெட்டர் பேட் கட்சிகளையும் ஒழிக்கவேண்டும் . .கைரேகை கொண்டு வாக்களிக்க செய்யவேண்டும் .
இரண்டு தொகுதியிலும் மக்களவை தேர்தல் உறுதியாக வராது .மக்கள் விவரமானவர்கள் . அரசுக்கு செலவு வைக்க மாட்டார்கள்
அரைகுறை அரசியல் வாதி ..மேலும்
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
-
டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
-
கெடுவை நீட்டித்தார் டிரம்ப் ; கிண்டலடிக்கிறது ஈரான்
-
வங்கதேசம்: தட்டம்மை நோய்க்கு 98 குழந்தைகள் பலி