வங்கதேசம்: தட்டம்மை நோய்க்கு 98 குழந்தைகள் பலி

டாக்கா: வங்கதேசத்தில், கடந்த மூன்று வாரங்களில் தட்டம்மை நோயின் காரணமாக, 98 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும், நிலைமை மிகவும் அச்சமூட்டும் வகையில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களில் அதிகரித்துள்ளது. தட்டம்மை இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 6,476 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய பாதிப்பு அதிகரிப்புக்கு தடுப்பூசி பற்றாக்குறை உட்பட பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் தட்டம்மை நோயின் காரணமாக, 98 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என சுகாதாரத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நோய் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணிகளை வங்கதேச அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement