டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
வாஷிங்டன்: ஈரான் மீதான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்பாடு மற்றும் அவர் தெரிவித்து வரும் கருத்துகளை அடுத்து, அவரை பதவி நீக்கம் செய்வது குறித்த தீர்மானத்தை, அந்நாட்டு செனட் சபையில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முடக்கி வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கும்படி, ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் பல முறை வலியுறுத்தியுள்ளார். இதற்காக கொடுத்த அவகாசத்தை அவர் தொடர்ந்து நீட்டித்து வருகிறார்.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதியாக இன்று வரை காலக்கெடு விதித்துள்ளார் டிரம்ப். இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான வசை சொற்களுடன் கூடிய கடுமையான ஆட்சேபனைக்குரிய ஆபாச வார்த்தைகள் அடங்கிய மிரட்டலையும், தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு, உலக நாடுகள் பலவும் அதிருப்தி தெரிவித்திருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சித் தலைவர்கள் மற்றும் டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தின் நான்காவது பிரிவைப் பயன்படுத்தி, அதிபரை அவரது பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அமெரிக்க அரசியலமைப்பின் 25வது திருத்தச் சட்டத்தின் நான்காவது பிரிவின்படி, ஒரு அதிபர் தன் பணிகளையும், கடமைகளையும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கருதப்பட்டால், துணை அதிபர் மற்றும் அமைச்சரவையின் பெரும்பான்மையினர், அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கு, அமெரிக்க செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. இது செயல்படுத்தப்பட்டால், துணை அதிபர் உடனடியாக பொறுப்பு அதிபராக பதவியேற்பார்.
தற்போது செனட் சபையில் மொத்தமுள்ள 100 இடங்களில், பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை. குடியரசு கட்சி 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 45 உறுப்பினர்களுடனும், சுயேச்சைகள் இரண்டு உறுப்பினர்களுடனும் உள்ளனர்.
தீர்மானம் போட்டு.... அப்படியே தமிழ் நாட்டில் விடியல் தலைவருக்கு அனுப்பி வையுங்கள்.... ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்ததது போல்.... அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து நீக்கி விடுவார் ???
அதைய்ய சீக்கிரமா செய்யுங்க ராகுலு போல அரை புத்திக்காரனை ஜனாதிபதவி பதவியில் உட்க்காரவைத்து பல நாடுகளுக்கு பிரச்சனையாகி போயிடுச்சி. கொஞ்ச நாளையக்கு மோடிஜி அவர்களை இரவல் வாங்கி அந்த பதவியில் உட்காரவைத்து பாருங்க நிலமை சரியானதும் உங்க ஆளை அங்கு உட்கார வையுங்க. வீனா போனவன் பாகிஸ்தான் கேட்ட மூளையை உடையவன் போல செய்யல் படும் ட்ரம்ப் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரத்தியெ கெடுத்து விட்டான்.
இனிமேல் தீர்மானம் போட்டு? .........என்னத்த போட்டு..... என்னத்த பண்ணி..... அதுக்கு இன்னும் காலம் ஆகும்
சீக்கிரம் முடிச்சிவிடுங்கப்பா எல்லா உலக நாடுகளும் தத்தளிக்கிறார்கள் .
இரான் போர் முடிவுக்கு கொண்டு வர விடியல் ஒருவரால் மட்டுமே முடியும், எல்லோரும் சேர்ந்து விடியலின் தலைமையில் இரான் சென்றால் எல்லோரும் அடங்கி விடுவார்கள் மேலும் பெட்ரோல் 10 ரூவாய்க்கு கிடைக்கும்,
இவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரி ....நம்ம ஊரு விடியலை போல ....
அவர் செய்யும் செய்கையால், தனது நாட்டிற்கு பெருமை பெற்று தர வேண்டும். ஆனால், நடப்பதே வேறு. அனைத்து உலக நாடுகளின் வசைகளை தட்டி செல்கிறது அவரது தேசம். தனது தேசத்தை, கண்கூடாக அழியும் பாதையில் கொண்டு சென்றுவிட்டார், மேற்கண்ட நோபேலுக்காக எங்கும் அதிபர்.மேலும்
-
ஓட்டுக்கு பணம் வாங்காதே என்று பிரசாரம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்: சொல்கிறது போலீஸ்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
தொழில்துறை விவகாரங்களில் புதுவிதமாக சிந்திக்கும் மோடி அரசு; கோவையில் பீயூஷ் கோயல் பேச்சு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு