முதல்வர் ஸ்டாலின், சீமான் வேட்பு மனு தாக்கல்... இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 30)!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 30) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாருக்கு இன்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தண்டனை விபரங்களை அறிவிக்கிறது.
* நக்சல் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் காலக்கெடு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அந்த இயக்கத்தின் செயல்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கை குறித்து லோக்சபாவில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. திவால் சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
* தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், 4 நாட்கள் விடுமுறை என்பதால் அந்த நாட்களில் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் கமிஷன் கொடுத்த 8 நாள் அவகாசத்தில் வேட்பாளர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
* அசாம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாஜ தொண்டர்களுடன், பிரதமர் மோடி இன்று 'நமோ' செயலி வாயிலாக உரையாடுகிறார்.
* சட்டசபை தேர்தல் பிரசாரத்தை விஜய் இன்று தொடங்குகிறார்; பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
* காஞ்சிபுரத்தில் இருந்து இன்று தேர்தல் பிரசாரத்தை துணை முதல்வர் உதயநிதி தொடங்குகிறார்; திமுக எம்பி கனிமொழி நாளை பிரசாரத்தை தொடங்குகிறார்.
* சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(மார்ச் 30) மாலை திமுக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்தளிக்கிறார். சட்டசபை தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது; தேர்தலில் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
* கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் 4வது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
* காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்; 234 தொகுதிகளிலும் நாதகவினர் இன்று தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
* திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது.
ஆன்மிகம்
* மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா இன்று மாலை நடைபெறுகிறது.
விளையாட்டு
* நடப்பு கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் இன்று விளையாட உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
தேவையற்ற விடுமுறைகள் மக்களை பாதிக்கிறது... சனிக்கிழமை அரசு விடுமுறை தேவையில்லாதது.. தனியார் போல் வருடம் 9 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு அரசு விடுமுறை தரவேண்டும்...
இது மிக கொடிய நிகழ்வு. இவற்றை செய்தித்தாள்களில் படித்தபோது இதற்காகவே ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்தேன். பொது மக்களை பாதுகாக்க வேண்டியவர்கள் அடித்து கொலை செய்ததை அந்த நாட்களில் சில நாட்கள் உறங்காமல் இருந்துள்ளேன். இதில் சம்பந்தப்பட்ட மிக கொடியவர்களுக்கு மிக அதிகபட்ச தண்டனையாக உயிர் போகும்வரை தூக்கிலிட வேண்டும் என வேண்டுகிறேன்.மேலும்
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?