நான் திரள் நிதி வாங்குகிறேன்; நீ திருட்டு நிதியில் கட்சி நடத்துகிறாய்; திமுக மீது சீமான் பாய்ச்சல்
காரைக்குடி: ''நான் மக்களிடம் திரள்நிதி கேட்கிறேன். அன்பு இருக்கிறது கொடுக்கிறான். நீ திருட்டு நிதி வைத்து கொண்டு கட்சி நடத்துகிறாய்'' என திமுகவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார்.
காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழியுடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சீமானின் மனைவி கயல்விழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: சேதுபதி மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் நாம். வாக்குக்கு கையேந்தாதீர்கள். 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வேண்டும் என யாராவது உங்களிடம் கேட்டார்களா?
திரள்நிதி vs திருட்டு நிதி
நான் மக்களிடம் திரள்நிதி கேட்கிறேன். அன்பு இருக்கிறது கொடுக்கிறான். நீ திருட்டு நிதி வைத்து கொண்டு கட்சி நடத்துகிறாய். நான் திரள் நிதியில், மக்கள் பைசாவில் மக்கள் இயக்கம் நடத்துகிறேன். அதனை ஏன் நீ கேவலப்படுத்துகிறாய். பிச்சை எடுக்கிறான் சீமான் என்கிறாய். மக்களை கையேந்த வைத்தது பிச்சை இல்லாமல் எப்படி இலவசம் ஆகும். 60 ஆண்டு காலமாக மக்களை கையேந்த வைத்தது தான் திராவிட கட்சிகளின் சாதனை.
கெஞ்சினார்களா?
இலவசமாக பஸ் விடுங்கள் என்று யாராவதும் வந்து அரசிடம் போய் கெஞ்சினார்களா? சாராயக்கடைகளை மூடுவோம் என்று யாரும் சொல்ல முடியவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதை செய்ய பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவார்கள். மண்ணின் வளத்தை, மக்களின் நலத்தை ஈடாக வைத்து கொண்டு கடன் வாங்குகிறீர்கள்.
நல்லாட்சி
எதனை நம்பி கடன் கொடுக்கிறார்கள். கல்வி, மருத்துவம் சிறந்ததாக இருக்கிறதா? எதிர்க்கட்சியாக முதல்வர் ஸ்டாலின் இருந்த போது மக்கள் இலவசத்தை விரும்பில்லை, வேலையை தான் கேட்கிறார்கள் என்று பேசிய வீடியோ இருக்கிறது. ஒரு நேர்மையான, நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என நினைப்பவர் ஏன் மக்களுக்கு இலவசமாக தருவதாக கூறி ஏமாற்ற வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.
உனக்கு எங்கிறிந்து பணம் வருகிறது என்று சொல்லவில்லை! நீ உபயோகிக்கும் சொகுசு யார் கணக்கு?
அப்போ மேடையையேரி பேராசை வரும்போது நிர்வாகிகளய் ஆடம்பர ஹோட்டலில் ரூம் போட சொல்வது எதில் சேர்த்திய எல்லாம் உத்தன்மங்கள தான். உத்துபாத்தா உத்தமான்கள். எனமற்று பயல்களை இதில் கருப்பு என்ன வெள்ளையென. பதவிக்கு வர துடிப்பது கொள்ளையடிக்க பிறகு வெளி நாடுகளில் பதுக்க
திமுகவை மிக பயங்கரமாக சீமான் எதிர்க்கிறார். ஸ்டாலினை கடுமையாக விமரிசிக்கிறார். அதிமுக-பிஜேபி கூட்டணியை விமரிசிக்கவில்லை. விஜய்யை விமரிசிக்கவில்லை. கடைசியில் அதிமுக-பிஜேபி கூட்டணியின் ஓட்டினை பிரிக்கிறார். திமுகவிற்கு உதவுகிறார். திரை மறைவு கூட்டணி நாடகம் எப்படி ?
திரள் நிதியில் நீ தின்பது. ஊரறிந்த ஒன்று.
அவனுங்களாவது அடித்த கொள்ளையில் மக்களுக்காக ஏதாவது திட்டங்களை கொடுக்கிறாகள் ,ஆனால் நீ அடிக்கிற திரள்நிதியில் கொடைக்கானலில் எஸ்டேட் , பங்களா பிள்ளைக்குகளுக்கு வெளிநாட்டு கல்வி என்று கொடிகட்டி பறக்கிறாய்
அது என்ன திருட்டு நிதிக்கு இன்னொரு பெயரா?
இது என்ன எல்லோரும் ஸ் டா லி ணையய தான் திட்டு கிறார்கள்? அப்படி என்ன பழனி சுய நலமற்றா ஆள. திருட்டு செய்வதில்லையா கொலை செய்வதில்லையா? யோக்கியனா? கூட இருப்பவர்களுக்கு ஆளுயர குழி வெட்டுவதில்லையா? பணம் கொடுத்தவர்கள் மடியையெ பதம் பார்த்ததில்லையா?
தி மு க விற்கு வோட்டு போடுவது தமிழக ஹிந்துக்கள் எரியும் கொள்ளிக்கட்டை எடுத்து தலை சொரிவது போல .. அ தி மு க விற்கு வோட்டு போடுவது அவர்கள் மேலே இருக்கும் கேஸ் பைசலாகும் . பி ஜே பி தற்பொழுது பொக்கோடா சாப்பிடுகிறார்கள் .அண்ணாமலை அவர்கள் எந்த பதவியும் இல்லாத தால் ,
சீமான் வோட்டை போடுவது வெற்றிக்கு உதவாது. மிஞ்சி இருப்பது விஜய் மட்டுமே.. 18 டு 45 உள்ளவர்கள் உள்ளவர்கள் அனைவரும் வோட்டை போடுவது வெற்றிகுக் வழி செய்யும் .
சீமானிடம் பதவியை கொடுத்தால் அவரும் திரள் நிதியை விடுத்து கொள்ளை அடிக்க தொடங்குவார் . ஆக "யாருக்கும் வெட்கமில்லை ". அரசியலில் இதெல்லாம் சகஜம் என்ற நிலைக்கு மக்களும் வந்துவிட்டார்கள் .
தி மு க விற்கு வோட்டு போடுவது தமிலாக ஹிந்துக்கள் எரியும் கொல்லி கட்டை எடுத்து தலையில் சொரிவது போல. அ தி மு க விற்கு வோட்டு போடுவதுஹிந்துக்களுக்கு ஒன்றும் உதவாது. பி ஜே பி ..தற்பொழுது பொகோடா சாப்பிடுகிறார்கள்மேலும்
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?