மேலும் 2 புதிய ஆதார் மையங்கள்
கோவை: பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்தில் மேலும் இரு புதிய ஆதார் மையங்கள் திறக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் தற்போது 18 ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் மூலம் புதிய ஆதார் அட்டை விண்ணப்பித்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு சர்க்கார் சாமக்குளம் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் மேலும் இரண்டு புதிய ஆதார் மையங்கள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
முன்னதாக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில், காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை நகராட்சி அலுவலகங்களில் ஏற்கனவே ஆதார் மையங்கள் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது மேலும் இரண்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், பொதுமக்கள் ஆதார் சேவைகளை எளிதில் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும்
-
'டவுட்' தனபாலு
-
திருச்சி சிறை சிறப்பு முகாமிற்கு வந்த உணவு பார்சலில் கஞ்சாவால் 'ஷாக்'
-
தகவல் சுரங்கம் தேசிய கடல்சார் தினம்
-
அறிவியல் ஆயிரம் சிறிய மாற்றம்... பெரிய பலன்
-
நான்கு நாட்களில் சப்ளை: முதல்வர்
-
-ட்ரோன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த அரசு புதிய கொள்கை: அமைச்சர் விரைவில் அறிவிப்பு என அமைச்சர் தகவல்