திருச்சி சிறை சிறப்பு முகாமிற்கு வந்த உணவு பார்சலில் கஞ்சாவால் 'ஷாக்'
திருச்சி: மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ளவர்களுக்கு, உணவு பார்சலில் கஞ்சா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில், குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர், குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, இச்சிறப்பு முகாமில் ஜெகன், 28, என்பவர் உணவு 'ஆர்டர்' செய்ததாக, ஒருவர் சிறப்பு முகாம் வாசலில் உள்ள சிறைத்துறை போலீசாரிடம், பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த பார்சலில், 10க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளன. ஜெகனிடம் விசாரித்தபோது, அந்த பார்சல், அதே முகாமில் உள்ள இலங்கையைச் சேர்ந்த டிரோசன், 27, என்பவர் ஆர்டர் கொடுத்தது என தெரிந்தது.
டிரோசன், ஜெகன், பார்சலை கொண்டு வந்து கொடுத்த நபர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. உணவு பார்சல் மூலம், சிறப்பு முகாம்வாசிகளுக்கு கஞ்சா சப்ளை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்
-
அடுத்தடுத்து எதிர்ப்பு: அமைச்சர் அனிதா தவிப்பு!
-
காலப்பட்டில் காங்., வேட்பாளர் ஷாஜகான் ஓட்டுசேகரிப்பு
-
சேதராப்பட்டில் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் : என்.ஆர்., காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு
-
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
-
தி.மு.க., தேர்தல் அறிக்கை தமிழக முதல்வர் வெளியீடு
-
வில்லியனுார் தொகுதியில் ரூ.424 கோடியில் வளர்ச்சி பணி சாதனை பட்டியலை வெளியிட்டு தி.மு.க., வேட்பாளர் சிவா பேட்டி