ஆட்டிசம் பாதிப்பால் தடையில் லை
ஆட்டிசம் என்பது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறைபாடு. இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, இந்நோய் அதிகம் தாக்குகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நடத்தை, கற்றல் முறை குறைபாடு ஏற்படும். ஆனாலும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் நிறைய சாதனைகள் படைக்கின்றன. அவர்களில் ஒருவர் அன்யவ்.
மங்களூரு சன்னித்யா சிறப்பு குழந்தைகள் உறைவிட பள்ளியில் படிக்கும் இவர், கீ போர்டில் சினிமா, பக்தி பாடல்களை வாசித்து அசத்துகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கத்ரி பார்க் பகுதியில் நடக்கும் கன்னட நிகழ்ச்சிகளில், கீ போர்டு மூலம் பக்தி பாடல்களை வாசிக்கிறார்.
இதுகுறித்து பள்ளியின் நிர்வாகி வசந்த் குமார் ஷெட்டி கூறியதாவது:
ஆட்டிசம் என்பது வாழ்நாள் முழுதும் நீடிக்கும் நரம்பியல் பாதிப்பு. அது மனநல கோளாறு இல்லை. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பல திறமைகள் உள்ளன. அவர்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்பட்டால், இச்சமூகத்தில் சிறந்த நபர்களாக விளங்க முடியும்.
அன்யவ் இரண்டு ஆண்டுக்கு முன் எங்கள் பள்ளியில் சேர்ந்த போது, அவரிடம் எந்த திறமையும் இல்லை. சாதாரண மாணவனாக இருந்தார். அவரிடம் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்ட போது, இசை என்று கூறினார்.
பள்ளியில் உள்ள கீ போர்டை ஆர்வமாக பார்த்து கொண்டே இருந்தார். கீ போர்டு மீது அவருக்கு ஆர்வம் இருப்பது தெரிந்ததும், கீ போர்டில் வாசிக்க அவருக்கு பயிற்சி அளித்தோம். ஆர்வமாக வாசித்தார். ஏதாவது சினிமா பாடலை ஒன்றுக்கு, இரண்டு முறை முழுமையாக கேட்டு விட்டால், அந்த பாடலை அப்படியே கீ போர்டில் வாசித்து விடுவார்.
தேசிய கீதம், கன்னட தாய் வாழ்த்தையும் கீ போர்டில் வாசிக்கிறார். மங்களூரில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு கீ போர்டு வாசிக்க அன்யவ்வை அழைத்து செல்கின்றனர். இதை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவரது எதிர்காலம் நன்றாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
நைஜீரியா தாக்குதல்களில் 4 போலீசார் உட்பட 26 பேர் பலி
-
தேர்தல் கமிஷனரை பதவி நீக்க நோட்டீஸ்: பார்லி., இரு சபைகளிலும் நிராகரிப்பு
-
பதஞ்சலி நிறுவனத்திற்கு அதிர்ச்சி; சுங்க வரி விதிப்பில் அதிரடி தீர்ப்பு
-
தேசியவாத காங்., நிர்வாகி கொலை வழக்கு: 'மாஜி' முதல்வர் மகனுக்கு ஆயுள் தண்டனை
-
என் மனைவிக்கு இரட்டை குடியுரிமையா? பாக்., உடன் சேர்ந்து சதி செய்கிறது காங்., : அசாம் முதல்வர் விளக்கம்
-
உ.பி., வழக்கறிஞர் கொலையில் 3 பேருக்கு துாக்கு தண்டனை