நைஜீரியா தாக்குதல்களில் 4 போலீசார் உட்பட 26 பேர் பலி
அபுஜா: கடந்த வார இறுதியில் நடந்த மூன்று வெவ்வே று தாக்குதல்களில் போலீசார் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் சமீபகாலமாக மத ரீதியிலான மோதல்கள், நில பிரச்னைகள் மற்றும் ஆயுதமேந்திய கும்பல்களின் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து சர்ச்சுகள் மற்றும் கிரா மங்களை குறி வைத்து ந டத்தப்படும் தாக்குதல்கள் சர் வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், நைஜீரியாவின் பெனுவே மாகாணத்தின் குவெர் வெஸ்ட் பகுதியில் உள்ள ம்பாலோம் சமூகத்தினர் மீது ஆயுதமேந்திய குழு தாக்குதல் நடத்தியது.
இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். போர்னோ மாகாணத்தின் போலீஸ் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 4 போலீசார் கொல்லப்பட்டனர். கடுனா மாகாணம் அரிகோ கிராமத்தில் உள்ள ஒரு சர்ச் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
-
35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
-
ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்