ஓய்வு பெற்ற 15 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா



கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள, 123 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், இந்த கல்வியாண்டில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என, 15 பேருக்கு, கிருஷ்ணகிரி வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, மாதேஷ்வரி, பாபு ஆகியோர் சார்பில், பிரிவு உபசார விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது.


இதில், ஆசிரியர்கள் டேவிஸ், சேகர், ரதினா, ஷாபுதின், கற்பகவாணி, பாரதி, சரஸ்வதி, பசிலதுண்ணிஸா, மாதப்பன், சண்முகசுந்தரம், வாசுகி, சாந்தி, தனலட்சுமி, வெங்கட்ரத்னம் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் பணிநிறைவை பாராட்டி பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி, மரியாதை செய்தனர்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில், வட்டார தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement