வானுார் தொகுதியில் தி.மு.க.,வேட்பாளர் மனு தாக்கல்

வானுார்: வானுார் சட்டசபை தனி தொகுதியில் முதல் முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் கவுதம் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையொட்டி, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வானுார் தாலுகா அலுவலகத்திற்கு வந்தடைந்தார். அங்கு, மதியம் 1:00 மணிக்கு, மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலையில், வேட்பாளர் கவுதம், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜூயிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளருக்கு, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement