சென்னையில் நாளை விஜய் பிரசாரம்
சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாளை( ஏப்ரல் 06) சென்னையில் நான்கு தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
முதல்முறையாக தேர்தல் களம் புகும் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, கடந்த 30ம் தேதி தாக்கல் செய்த அவர், பிரச்சாரத்தையும் துவக்கினார். பின் கொளத்துார் சென்ற அவர், கூட்ட நெரிசலில் சிக்கியதால், அடுத்து வில்லிவாக்கத்தில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில், வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தி. நகர் ஆகிய நான்கு தொகுதிகளில், நாளை விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுமே மிகவும் நெருக்கடியான பகுதிகள் என்பதால், தேர்தல் கமிஷன் மற்றும் சென்னை காவல்துறை தரப்பில், தவெகவிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன.அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன், விஜய் பிரச்சாரத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் பிரசாரம் செய்ய விஜய் அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்த பின், வரும் 7 அல்லது 8ம் தேதியில், விஜய் அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.
யாராக இருந்தாலும் துப்புறவு தொழிலாளர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள். அவர்கள் வயிற்றில் அடித்து இந்த நாடு என்ன உருப்பட போகிறது.
விஜய்யை பார்க்கவேண்டுமென்கிற ஆர்வத்தில் எத்தனை பயித்தியம் நாளை கூட்ட நெரிசலில் சிக்கி மாளப்போகிறதோ.மேலும்
-
பெரிய நாயகி அம்மன் கோயிலில்ஏப்., 20 ல் கும்பாபிேஷகம்
-
சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை: எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு
-
மகன் இறப்பில் சந்தேகம்: தாய் எஸ்.பி.,யிடம் புகார்
-
எஸ் கரிசல்குளம் கோயிலில் பங்குனி பொங்கல் விழா
-
அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து
-
முதியோர் பென்ஷன் பெறுவோரிடம் வாழ்வுரிமை சான்றுக்கு வசூல் : சிவகங்கையில் சங்கங்கள் மீது புகார்