அதிக லாபம் ஈட்டும் தொழிலாக அரசியல் மாறி விட்டது: சீமான் குற்றச்சாட்டு
திட்டக்குடி: ''தி.மு.க., வந்தாலும், அ.தி.மு.க., வந்தாலும் டாஸ்மாக் இருக்கும்; சாராயம் விற்பார்கள்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளின் நா.த.க., வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
கூட்டத்தில் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் அதிகரித்துள்ள ஊழல், லஞ்சத்தை துடைத்தெறிய எனக்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அதிகாரம் என்பது மிக வலிமையானது. என் மக்களுக்காக, இந்த நிலைப்பாட்டை எடுத்து கொண்டு போட்டியிடுகிறோம். இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு புனிதமான பணி. ஆனால், தமிழகத்தில் அரசியல் என்பது அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறி விட்டது. நமக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை.
உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில், 3வது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. பரப்பளவில் சிறிய நாடான அங்கு, ஊழல், லஞ்சமற்ற நிர்வாகம் நடக்கிறது. அதற்கான தலைசிறந்த தலைவன் இருக்கிறார்; ஆனால் இங்கு அப்படி ஒரு தலைவன் இல்லை. நம் நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும், 30 சதவீதம் பேர் இரவு உணவில்லாமல் துாங்க செல்கின்றனர்.
நா.த.க., ஆட்சிக்கு வந்தால் இந்த நிலையை மாற்றுவோம்; ஊழல், லஞ்சமற்ற நாடாக உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளின் நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, வடலுாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்திலும் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, 'இலவசங்களை அறிவிப்பவர்கள் மக்களை ஏமாளியாகவே பார்க்கிறார்கள். உதயசூரியன், இரட்டை இலை, கை, தாமரை ஆகிய சின்னங்களுக்கு ஓட்டு போட்டதில், மக்கள் தோற்றார்கள். 'கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக' என வள்ளலார் கூறினார். திராவிட திருடர்களின் ஆட்சிதான் கருணையற்ற ஆட்சி. தி.மு.க., வந்தாலும், அ.தி.மு.க., வந்தாலும் டாஸ்மாக் இருக்கும்; சாராயம் விற்பார்கள்' என்று ஆவேசமாக கூறினார்.
கரெக்ட். உங்களுக்கே திமுக பல நூறு கோடி கொடுத்துள்ளதே? சரி நீங்க என்ன வேலை செய்கிறீங்க - இவ்வளவு சொத்து சேர்க்க?
நானூறு கோடி சொத்து சேர்த்தது இப்படித்தானா?
அரசு சாராயம் விற்பது அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 47 ல் கூறப்பட்டுள்ள கருத்துக்கு புறம்பானது.அதில் கூறப்பட்டிருப்பது மதுவிலக்குதான் அரசியல் சட்டம் .அதிலிருந்து மருத்துவம் காரணங்களுக்காக மட்டுமே மாநிலங்கள் விலக்கு அளிக்கலாம் என்பதுதான் .தவறாக அறியப்பட்டு ஒரு பிழையான உச்சமன்றத் தீர்ப்பினால் மாநிலங்கள் எல்லாம் சாராயம் விற்க இறங்கிவிட்டார்கள் .அரசுக்கு வருவாயிக்காக மக்களுக்கு கேடுவிளைவிக்கும் என்னவேண்டுமானாலும் செய்யமுடியுமா ? இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசியல் அமைப்பு குழுவால் மறுபரிசீலனைக்கு உகந்தது .
அதற்குத்தான் நீங்களும் ஆசைப்பட்டு அந்த தொழிலுக்கு வந்துள்ளீர்கள்.மேலும்
-
8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
-
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
-
தன் பெயரில் களம் இறங்கிய சுயேச்சை; 100 பேர் வந்தாலும் கவலை இல்லை என்கிறார் செந்தில் பாலாஜி
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்