இபிஎஸ் சொன்ன பொய்களை புத்தகமே போடலாம்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர்: இபிஎஸ் சொல்லியிருக்கும் பொய்களை புத்தகமே போடலாம்; தான் சொன்ன பொய்களிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து பொய் சொல்கிறார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இபிஎஸ் சொல்லியிருக்கும் பொய்களை புத்தகமே போடலாம்; தான் சொன்ன பொய்களிலிருந்து தப்பிக்க அடுத்தடுத்து பொய் சொல்கிறார்.
துரோகம்
காமராஜர் இறந்தபோது மெரினா கடற்கரையில் இடம் தர மறுத்தோம் என்கிறார் இபிஎஸ். சங்கி கூட்டணியில் சேர்ந்துவிட்டதால் வாட்ஸ் அப் வதந்தி போல் வாந்தி எடுக்கிறார். துரோகத்துக்கு உருவம் கொடுத்தால் அது இபிஎஸ் தான்; தன்னை நம்பியவர்களுக்கு அல்வா கொடுத்தவரை மக்கள் எப்படி நம்புவார்கள். வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு துரோகம். பாஜவுடன் சேர்ந்து சிறுபான்மையினருக்கு துரோகம்.
ஏற்கனவே 10, அடுத்து 11
கட்சியில் உங்களை வளர்த்த சசிகலா, செங்கோட்டையனுக்கு துரோகம், ஓ.பன்னீர் செல்வத்துக்கு துரோகம். ஏற்கனவே 10. அடுத்து 11. விசுவாசத்திற்கு ஒரு உருவம் கட்டப்பா என்றால் துரோகத்திற்கு உருவம் இபிஎஸ். இல்லத்தரசி திட்ட வாக்குறுதியால் இபிஎஸ் வேதனையில் உள்ளார். பியூஸ் போன சாமி ஆகிவிட்டார். அதில் ஊழல் செய்துவிடுவோம் என்கிறார்.
தமிழகம் VS டில்லி
அவர் அவரது ஆட்சியில் நடப்பதையே எங்கள் ஆட்சியிலும் நடக்கும் என நினைக்கிறார். தேர்தல் வந்தால் இவர்களுக்கு காமராஜர் மீது மரியாதை வந்து விடும். டில்லியில் அவரை வீட்டோடு வைத்து எரிக்க முயன்றவர்கள் சங்கிகள். இப்படிப்பட்ட தமிழின விரோதிகளை தடுக்க வேண்டும். பாஜ ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் எந்த நிலையில் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். தமிழகம் அணியா? டில்லி அணியா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
விருதுநகர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் இவர் ஒரு பொய்யர் , காரியம் ஆகினும் என்றால் காலில் விழ கூட தயங்க மாட்டார்
போன தேர்தலுக்கு நீங்க 505 வாக்குறுதி புத்தகம் போலவா முதல்வரே
நீங்க திமுக சொன்ன பொய்களை புத்தகமா கூட போடமுடியாது. பிரிண்ட் செய்ய பேப்பர் பத்தாது. அவ்வளவு பொய்கள் நீங்கள் வாயை திறந்தால் ...
poi mootaigalin uruvam palanisamiyai elanam pesugirathu. indha moo ka vin vamsathai oda oda virattida vendum
பாவம் - வேற விஷயமே கிடைக்கல பேசுவதற்கு
திருட்டு திமுக அரஜாகங்கள் மக்கள் வரி பணத்தை கொள்ளை அடித்தது பற்றி 1000 பக்கங்களில் 5 புத்தகங்கள் வெளியிடலாம்.
அப்ப நீங்க சொன்ன பொய்களை காவியமே எழுதலாம்.
உங்கள் பொய்கள் 2021 திமுகவின் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் நீங்கள் வெளியிட்டுள்ளதை தமிழ்க் குடிமகன் என்ற முறையில் தங்களது நினைவுக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.
தனி மனித தாக்குதல் விடுத்து கண்ணியமான ????? அரசியல் செய்ய இனியாவது முயற்சி செய்யுங்கள்..
அரதப்பழமையான திமுகவின் உத்தி இனியும் கைகொடுக்கும் என நம்பினால் அது எதிர்க்கட்சியின் அதிர்ஷ்டம்..
புள்ள பிடிக்கிறவன் கெட்டப்பில் ..
Dmk files அத்தனையும் ஒரு புக் ஆக போட்டாலே போதும்
Files ஏமாற்று வேலைகள் எல்லாம் டெல்லி கெஜ்ரிவால் நாடகத்தில் இந்தியா முழுவதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது அதர்மம் நீண்ட காலம் நிலைக்காது.மேலும்
-
முதல்வருக்கு நாவடக்கம் வேண்டும்: இபிஎஸ் காட்டம்
-
ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமான பைலட் மீட்பு
-
ரூ.9.5 கோடி தங்க நகை ராமநாதபுரத்தில் பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது
-
சென்னையில் 16 தொகுதிகள்: எந்தக் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'