ரூ.9.5 கோடி தங்க நகை ராமநாதபுரத்தில் பறிமுதல்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது

9


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சாயல்குடி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராஜா என்பவர் காரில் 18 பெட்டிகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்களை கொண்டு வந்துள்ளார்.

சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள நகைகளை முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement