ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமான பைலட் மீட்பு

வாஷிங்டன்: ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பிப்., 28ல் போரை தொடுத்தன. போரை நிறுத்த ஒரு பக்கம் முயற்சி நடந்தாலும் இரு தரப்பும் தாக்கி கொண்டன. தெற்கு ஈரானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் எப் -15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது.


இந்த விமானத்தின் மதிப்பு 289 கோடி ரூபாயாகும். 174 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்காவின், ' ஏ - 10 வார்த்ஹாக்' என்ற தாக்குதல் விமானத்தையும் ஈரான் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க சிறப்பு படைகள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, எப்-15 விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளில் ஒருவரை மீட்டது; மற்றொருவர் காணாமல் போனார்.


காணாமல் போன மற்​றொரு விமானியை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டது. அமெரிக்க விமானியை தேடும் பணி​யில் ஈரான் ராணுவ​மும் தீவிர​மாக ஈடு​பட்டது. அவரை கண்​டு​பிடித்து தரும் நபருக்கு 10 லட்​சம் ரியால் (ரூ.55 லட்​சம்) பரிசு வழங்​கப்​படும் என்று ஈரான் அரசு அறி​வித்​து இருந்தது.


இந்த சூழலில், ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் காணாமல் போன அமெரிக்க விமானி அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டுள்ளார் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:


காணாமல் போன விமானியை கண்டுபிடித்துவிட்டோம். என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களில், அமெரிக்க ராணுவம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.


மீட்கப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் நலமாக உள்ளார். உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மீட்பு நடவடிக்கையில் பல்வேறு விமானங்கள் ஈடுபட்டது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement