தொகுதி பிரச்னைக்கு தீர்வு காண முதல் ஆளாக ஓடி வருவேன்: என்.ஆர்.காங்., வேட்பாளர் உறுதி
புதுச்சேரி: 'தொகுதியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண நான் முதல் ஆளாக ஓடி வருவேன்' என என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி பேசினார்.
சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் தேசிய ஜனநாக கூட்டணியில் என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர், உழவர்கரை தொகுதிகுட்பட்ட மோரிசான் தோட்டம், ஜெ.ஜெ. நகர்., ரோம் நகர், பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, என்.ஆர்.காங்., அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி வீடு வீடாக துண்டு பிரசுரம் கொடுத்து ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன். முதியோர் உதவித்தொகை உட்பட அரசின் அனைத்து திட்டங்களும் தொகுதியில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்வேன். தொகுதியில் உள்ள பிரச்னைக்கு தீர்வு காண நான் முதல் ஆளாக ஓடி வருவேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
ஓட்டுசேகரிப்பின் போது, என்.ஆர்.காங்., நிர்வாகிகள், பா.ஜ., - ல.ஜ.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.,
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
கேரளா, புதுச்சேரி, அசாமில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
-
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே: விறுவிறு அரசியல் செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு
-
8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்