8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
நமது நிருபர்
தமிழகத்தில், 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான புதுப்பித்தல் அங்கீகாரத்தை அரசு வழங்காததால், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட நிர்வாக பணிகள் முடங்கிஉள்ளன.
தமிழகத்தில், 15,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், 68 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்கப்படுகிறது. கட்டட உறுதித்தன்மை, தீயணைப்புத் துறை மற்றும் சுகாதார சான்றிதழ் மற்றும் கல்வித் தர நிலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பொறுத்து, தொடர் அங்கீகாரம் வழங்கப்படும்.
சான்றுகளை பெற்று, டி.இ.ஒ., அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பித்து, இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.தமிழகம் முழுதும், 8,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை என, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: அனைத்து சான்றுகளை யும் முறையாக சமர்ப்பித்து, பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் பல ஆண்டு களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மாதந்தோறும் மாவட்ட வாரியாக சிறப்பு முகாம் நடத்தி, தனியார் பள்ளிகளுக்கு துரித முறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார ஆணைகளை முறையாக வழங்கவில்லை. புதுப்பித்தல் அங்கீகாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தமிழகம் முழுதும், 8,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் செயல்படுகின்றன.அங்கீகாரமில்லாததால் மாணவர்களுக்கு, டி.சி., வழங்குதல், பள்ளி வாகனங்களுக்கு எப்.சி., செய்தல், லோன் வாங்குதல், புதிய கட்டடங்களுக்கு கட்டட திட்ட அனுமதி அனைத்தும் தடைபட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் செயலற்ற தன்மையே, இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டப்படி அனைத்தும் சரியாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் நடக்காது.. திருட்டு திராவிட மாடலுக்கு அடிமையான தமிழன் அனுபவிக்க வேண்டிய விதி..
கழிப்பறை வசதி, play ground , சுற்றுச்சுவர், ஆசிரியர்கள் எணிக்கை இல்லாதபோது எப்படி அனுமதி கொடுக்க முடியும் ? விபத்து நடந்தால் எந்த கட்சியாய் இருந்தாலும் ஆட்சியாளரை குறை சொல்ல வேண்டியது, சாருமதி மறுத்தால் வசை பாட வேண்டியது.....
நடப்பு ஆண்டு எப்படி அங்கீகாரம் கொடுத்தார்கள். எனக்கு தெரிந்த ஒரு உண்மை சம்பவம். அதிமுக ஆட்சி யில் ஒரு நர்சரி பள்ளி RENEWAL அங்கீகாரம் பெற ரூபாய் 15,00,000/- லட்சம் கேட்டார்களாம். இவர்களால் கொடுக்க முடியவில்லை மேலும் அதிமுக ஆட்சி முடியற சமயம் ELECTION வந்த உடேன பார்துகொல்லாம் என்று 2021 DMK ஆட்சி வந்த உடேனே இவர்கள் RENEWAL APPLY செய்து உள்ளார்கள். DMK ஆட்சியில் ரூபாய் 50,00,000/- கேட்டு உள்ளார்கள். இது எப்படி இருக்கு.
இதை ஏன் எய்யவில்லை என்று வழக்கு தொடுக்க வேண்டியதுதானே? ஏன் செய்வதில்லை. எல்லோருமே ஊழல். நேர்மையானவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது.
இந்த 8000 பள்ளிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? இந்த 5 ஆண்டு கால ஆட்சியில?
தமிழக மக்களே, உங்கள் குழந்தைகளின் எதிர் கால வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமா? தயவு செய்து வரும் தேர்தலில் திராவிட மாடல் அரசை தோல்வி அடையச்செய்யுங்கள். மறுபடியும் இவர்கள் ஆட்சி வந்தால், தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. சிந்தித்து செயல் படுங்கள்.
எல்லாவற்றிற்கும் கமிஷன் எதிர் பார்க்கும் ஆட்சியில் இது ஒன்றும் அதிசயமில்லை. குழந்தைகள் படிப்பா முக்கியம்? இவங்களுக்கு கமிஷன் வாங்கிப் பையை நிரப்புவது தான் ஒரே குறிக்கோள்.
துறை கேட்ட பேரம் படியலை ....... எழுத்து மூலமாக காரணத்தை துறை கொடுக்கவும் தயக்கம் .... இதுதானாடா திராவிடியாள் மாடல் ......மேலும்
-
பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; ஆதவ் அர்ஜூனா மனு நிறுத்தி வைப்பு
-
தமிழகம் தான் டபுள் டிஜிட் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
திருநெல்வேலியில் நாளை விஜய் பொதுக்கூட்டம்: 51 நிபந்தனை விதித்த போலீசார்
-
அதிகார மமதையில் மக்களுக்கு நிகழும் கொடுமைகள்: கமல் காட்டம்
-
இனி ஆந்திர தலைநகர் அமராவதி: அதிகாரப்பூர்வமாக அரசிதழ் வெளியீடு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு