காரைக்குடியில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: ஓட்டல்களில் ‛மெனு' குறைப்பு
காரைக்குடி:காரைக்குடியில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் மெனுக்களை பாதியாக குறைத்துவிட்டனர். சட்டசபை தேர்தல் நேரத்தில் ஓட்டு பதிவு, எண்ணிக்கையின் போது காரைக்குடி செல்வோருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
ஈரான் போர் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், டீ, காபி விலை உயர்ந்துவிட்டன. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் விறகு அடுப்பிற்கு மாறி வருகின்றன. அதே நேரம் விறகு விலையும் உயர்ந்துவிட்டது. ஒரு டன் இன்றைக்கு ரூ.7 முதல் 8 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டது. விறகுகளை அதிக விலை கொடுத்து வாங்குவதால், ஓட்டல்களில் மெனுக்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் தான் 4 சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணி நடக்கும். இதனால் அங்கு செல்லும் தேர்தல் அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் கட்சியினர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
* இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது, வணிக சிலிண்டர் விலை ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை உயர்ந்துவிட்டன. விறகு அடுப்பிற்கு மாறிய நிலையில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் எரிபொருள் சிக்கனம் கருதி உணவு பொருட்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, அத்தியாவசிய உணவுகளை மட்டுமே சமைத்து விற்பனைக்கு தருகிறோம் என்றனர்.
///
-
மேலும்
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?