சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
தஞ்சை: தஞ்சையில் அரசுப் பள்ளியில் சினிமா பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடி வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் - தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை. இருப்பினும், அரசு சார்ந்த விழிப்புணர்வு வீடியோக்கள் மட்டும் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இயக்குநர் கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான 'யூத்' திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்பு விட்டாலே கோலிகுண்டு கண்ணாலே” என்ற பாடலை பலர் இன்ஸ்டாகிராமில் ரீகிரியேட் செய்து வெளியிட்டு வருவது ட்ரெண்டாக உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூரில் பிரபல நடனப் பள்ளியில் பயிற்சி பெறும் இளைஞர்கள் ஒன்றிணைந்து, அந்த பாடலை ரீகிரியேட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வீடியோவை தஞ்சாவூர் மேம்பாலம் அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் படமாக்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சினிமா மாணவர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக மாறி வருகிறது. பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விஜய் பாடல்களை பள்ளிகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதாகவும் உத்தரவு வந்தது. இவ்வாறு இருக்கும் நிலையில், அரசுப் பள்ளி வளாகத்தில் அனுமதி இன்றி சினிமா பாடலுக்கு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அரசுப் பள்ளியில் படப்பிடிப்பு நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்கினாரா? அல்லது பள்ளி தலைமையாசிரியர் அனுமதி அளித்தாரா? என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும்
-
ஆந்திராவில் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்க முடிவு
-
தேனி மாவட்டம் நிகழ்ச்சி
-
நுாற்றாண்டைக் கடந்த புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மக்களின் நன்மதிப்புடன் திண்டிவனத்தின் அடையாளமாக திகழ்கிறது
-
மாம்பழம் சின்னத்தை அழித்த தி.மு.க.,வினர் மீது புகார்
-
தப்பித்தவறி அதிமுக ஆட்சி அமைத்தால்...: திருமாவளவன் சொல்வது இதுதான்
-
வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புங்கள்; பா.ம.க., வேட்பாளர் ஆவேசம்