ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-நமது நிருபர்-
'கேவி குப்பம் தொகுதியில் போட்டியிட மறுத்தது, ஏமாளித்தனமா, அரசியல் தெளிவா என்பதை புரிந்து கொள்ளுங்கள்,' என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்தபோது என்ன நடந்தது என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் திருமாவளவன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது: தொகுதி பங்கீடு நடந்தபோது, விசிகவுக்கு கேவி குப்பம் தருவதாக முடிவாயிற்று. அது வேலுார் மாவட்டம். அங்கே இன்னொரு தலித் தலைவர் நிற்கிறார். அதனால், திமுக நிர்வாகிகளிடம் நான், 'தொகுதி கொடுப்பதில் மகிழ்ச்சி. அதுவும் வெற்றி பெறக்கூடியது தான். ஆனால் வேண்டாம்' என்று கூறினேன்.
'ஏன்' என்று அவர்கள் கேட்டனர். 'அதிமுக கூட்டணியில் அந்த தொகுதியில் எதிர்த்து நிற்பவர் ஒரு தலித் தலைவர். இரண்டு தலித் அமைப்புகள் ஒரு தளத்தில் நேருக்கு நேர் மோதுவது நாகரிகமாக இருக்காது. வேண்டாம் வேறு தொகுதி கொடுங்க' என்று கூறி விட்டேன்.இது ஏமாளித்தனமா, அரசியல் தெளிவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார்.
ஏற்கனவே, சென்னை திரு.வி.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டியிடுவதை திருமாவளவன் வரவேற்று பேட்டி கொடுத்தார். இது, திமுக கூட்டணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 'தலித் அமைப்பின் தலைவரை எதிர்த்து போட்டியிட மாட்டோம்' என்று கூட்டணி பங்கீட்டின்போது கூறியதுடன், அதை பிரசாரத்திலும் தம்பட்டம் அடிப்பது போல பேசியது, திமுகவினர் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
கேவி குப்பத்தில் திமுக சார்பில் ராஜேஸ்வரி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தலைவர் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார் நமக்கு பதவி, சொகுசு, அதிகாரம் இருந்தாக வேண்டும் இனம், மக்கள் எல்லாம் இதற்கு உதவ வேண்டும் அவ்வளவுதான் ரொம்ப தெளிவு
உள்ளடி வேலையா? இல்லை தொகுதி பிரச்சனையில் பழி வாங்கலா?
அப்ப திருமா சொல்ல வருவது ... அவரு தலித் இனத்திற்கு மட்டும் தான் தலைவர். மற்ற இனம் ஒரு பொருட்டல்ல என்கிறார். அப்ப தலித் இனத்தவர் மட்டும் தான் அவருக்கு வாக்கு அளிக்க வேண்டுமா..
DHINAM ORU ULARAL BUILD UP IDHU ENNADHU KURUMA.IDHAI KOODA THURU PIDITHU IRUMBU KARATHAI PAARTHU COPY ADIKKANUMA.AAMAM UNGALAI PONDRA AALUKKU ORU KATCHI VERA.ASINGAM.
கோமாளித்தனம்
விசிக ஓட்டு திமுகவுக்கும் திமுக ஓட்டு விசிக்கவுக்கும் விழாது. இதில் அதிகமா பாதிக்கப்படுவது திமுகதான். திமுகவின் பெரியண்ணன் போக்கு சிறுத்தை கட்சியை அடக்க நினைப்பது சாத்தியம் இல்லை. மதிமுக கம்யூனிஸ்ட் என்று விசிக்கவை தப்ப எடை போட்டதற்கு தண்டனை இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.
வேற எப்படி இருக்கும் ?
2500 பேரு விருப்ப மனு குடுத்ததுக்கு நான்தான் காரணம் ன்னு பேசினாரு. இந்த கூட்டு+ ஆணி அடிமை. இன்னொண்ணும் சோன்னாரு. நான் தான் கூட்டு+ஆணி கட்சி தலைவருகிட்டே 7+1 குடுங்கன்னு சொல்லி சுமூகமா தொகுதி ஒதுக்கீட்டை சுமூகமாக முடித்து வைத்தேன். கூட்டு+ ஆணி கட்சி தலைவர் இடத்தில் இருந்து பார்த்தேன். 8 போதும் என்று முடிவு செய்தேன். அரசியலில் என்னை விட யாரும் இவ்ளோ தெளிவா இருக்க முடியாது. இதனால் தான் 25 வருஷமா கட்சி நடத்த முடியுது. பி.கு. பொட்டிய பத்தி பேசலை.
நான் நன்றாக புரிந்துகொண்டேன்.
தெருவில் நிற்கும் நாய், நாம் கல்லை எடுக்க முற்படும்போது நாலுகால் பாய்ச்சலில் ஒரே ஓட்டமாக ஓடிவிடும்.மேலும்
-
மகாசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
-
பித்தளை - செம்பு பாத்திர தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து
-
இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்
-
பொள்ளாச்சி - 13, வால்பாறை - 6, கிணத்துக்கடவு - 5 பேர் போட்டி
-
தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை
-
கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை