இளைஞர்கள் சுய தொழில் துவங்க உதவித் தொகை; ல.ஜ.க., வேட்பாளர் வாக்குறுதி
வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதி சித்தானந்த நகர் பகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் வீடு வீடாகச் சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது, அவருக்கு பெண்கள் மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மரகதம் அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.
அப்போது மாற்றுத் திறனாளி இளைஞர்கள் சுய தொழில் துவங்க 2 லட்சம் ரூபாய் மூலதன உதவித்தொகையாக வழங்கப்படும். தொகுதியில் முழு நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது, கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
கேரளா, புதுச்சேரி, அசாமில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
-
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே: விறுவிறு அரசியல் செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு
-
8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்
Advertisement
Advertisement