குவாரி குட்டை நீரில் மூழ்கி பெண் பலி

வானுார்: கிளியனுார் அருகே குவாரி குட்டையில் நீரில் மூழ்கி பெண் இறந்தார்.

சென்னை, வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் அருண்ராஜ். இவரது மனைவி எமிமால், 24; இவர்கள் நண்பர்களுடன் கிளியனுார் அடுத்த நல்லாவூரைச் சேர்ந்த கிருபாநிதி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை கொந்தமூர் கிராமத்தில் மைடாஸ் குவாரி குட்டையில் குளித்தனர். அப்போது, துணி மாற்றுவதற்கு நின்றிருந்த எமிமால், தவறி குட்டையில் ஆழமான பகுதியில் விழுந்து நீரில் மூழ்கினார்.

தகவல் அறிந்து வந்த வானுார் தீயணைப்பு நிலையத்தினர் குட்டையில் மூழ்கி இறந்த எமிமால் உடலை மீட்டனர்.

இதுகுறித்து கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement