தேர்தலையொட்டி மதுபான பார்களை மூட உத்தரவு

விழுப்புரம்: புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி மரக்காணம், வானுார் பகுதியில் உள்ள மதுபான பார்கள் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை மூட வேண்டும் என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தல் வரும் 9 ம் தேதி நடக்கிறது. இதனால், புதுச்சேரி எல்லை பகுதியையொட்டி, 5 கி.மீ., சுற்றளவில் உள்ள விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானுார் பகுதிகளில் செயல்படும் எப்.எல்., 3 உரிமம் பெற்ற 4 மதுபான பார்கள் மட்டும் இன்று 7ம் தேதி காலை 10 மணி முதல் வரும் 9ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரையிலும், வரும் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நாள் முழுதும் மூடப்பட வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement