கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.81.04 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 81.04 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று எள் 750 மூட்டை, மக்காச்சோளம் 100, உளுந்து 30, துவரை 2, வேர்க்கடலை, பச்சைப்பயிர், கம்பு தலா ஒரு மூட்டை என 885 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
சராசரியாக ஒரு மூட்டை எள் 10,570, மக்காச்சோளம் 1,906, உளுந்து 8,199, துவரை 4,127, வேர்க்கடலை 8,559, பச்சைப்பயிர் 7,899, கம்பு 4,539 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் நேற்று மொத்தமாக 81 லட்சத்து 4 ஆயிரத்து 524 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
இதேபோல், சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு எள் 29 மூட்டை, மக்காச்சோளம் 17 மூட்டை என மொத்தம் 46 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு மூட்டை எள் 12,350 ரூபாய், மக்காச்சோளம் 1,813 ரூபாய் என மொத்தம் 530 ஆயிரத்து 515 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் கமிட்டியில் நெல் 259 மூட்டை, எள் 100, மக்காச்சோளம் 33, உளுந்து 5, நாட்டு கம்பு 4, தட்டைப்பயிர் ஒரு மூட்டை என மொத்தம் 402 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக நெல் 1,407, எள் 10,233, மக்காச்சோளம் 1,839, உளுந்து 8,089, நாட்டு கம்பு 4,509, தட்டைப்பயிர் 3,239 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 15 லட்சத்து 4 ஆயிரத்து 372 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சங்கராபுரம் கமிட்டியில் மக்காச்சோளம் 915 மூட்டை, நெல் 843, உளுந்து 3, வேர்க்கடலை, தட்டைப்பயிர் தலா ஒரு மூட்டை என மொத்தம் 1,763 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக மக்காச்சோளம் 1,948, நெல் 1,569, உளுந்து 4,600, தட்டைப்பயிர் 2,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 29 லட்சத்து 55 ஆயிரத்து 917 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
மேலும்
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
-
டிரம்பை பதவி நீக்கம் செய்ய தீர்மானம் போட முடிவு?
-
கெடுவை நீட்டித்தார் டிரம்ப் ; கிண்டலடிக்கிறது ஈரான்
-
வங்கதேசம்: தட்டம்மை நோய்க்கு 98 குழந்தைகள் பலி