உளுந்துார்பேட்டை தி.மு.க., வேட்பாளர் அறிமுகம் நிகழ்ச்சி
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தி.மு.க., வேட்பாளர் வசந்தவேலை ஆதரித்து நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ரவிக்குமார் எம்.பி., வி.சி., கட்சி நிர்வாகிகளிடம் வேட்பாளர் வசந்தவேலை அறிமுகம் செய்து, உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வைக்க உழைக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தே.மு.தி.க.. நிர்வாகிகள் சந்திப்பில் மாவட்ட செயலாளர் கருணாகரன் பேசுகையில் வசந்தவேலை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கேட்டுக் கொண்டார்.
இரு நிகழ்ச்சிகளிலும் தி.மு.க., ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், பொதுக் குழு உறுப்பினர் செல்லையா, நகராட்சி கவுன்சிலர் மனோ, வி.சி., மாவட்ட பொருளாளர் அம்பேத், நகர நிர்வாகி ரமேஷ், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் திருமால், அருள், வெங்கடேசன், திருமுருகன், ராமச்சந்திரன், நகர செயலாளர் அஷரப்அலி, ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட நிர்வாகி பெருமாள் பங்கேற்றனர்.