டிரெண்டு மாற செய்திகள் ஆதரவாக இருக்க வேண்டும்
ஆரம்பத்தில் இருந்து மதியம் 1.30 மணி வரை சிறிது இறக்கத்தில் வர்த்தகமான நிப்டி, அதன் பின் ஏற ஆரம்பித்து, நாளின் இறுதியில், 155 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 14 ஏற்றத்துடனும்; 2 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால் கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.17 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.64 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 3 குறியீடுகள் இறக்கத்துடனும்; 16 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 0.71 சதவீத இறக்கத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 2.50 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,314 பங்குகளில், 2,082 ஏற்றத்துடனும்; 1,147 இறக்கத்துடனும்; 85 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. எம்.ஏ.சி.டி., மற்றும் ஆர்.எஸ்.ஐ., மேம்பட்டிருக்கும் சூழலிலும் கூட நிப்டியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மீட்சியானது, டிரெண்டு மாற்றத்தை உறுதி செய்யாத, தற்காலிக ஏற்றமாகவே டெக்னிக்கலாக தென்படுகிறது. 23,350-23,450ல் நல்லதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. இதை தாண்ட முடியாவிட்டாலோ அல்லது, அதை நோக்கிய பயணத்தை தொடர முடியாவிட்டாலோ, மீண்டும் 22,800-22,400 வரை சென்று திரும்ப வாய்ப்பு இருக்கிறது. செய்திகளே இதை நிர்ணயிக்கும்.




நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 772.40 1.40
எட்டர்னல் 231.80 -0.40
டாடா ஸ்டீல் 197.90 1.80
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1,307.30 2.60
ஐ.டி.சி., 298.65 3.80
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 18.11 -0.04
சுஸ்லான் எனர்ஜி 41.50 -0.09
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 61.19 0.11
அசோக் லேலண்டு 152.46 1.55
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் 253.50 7.86
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
ஹிந்துஸ்தான் காப்பர் 503.60 0.25
என்.பி.சி.சி., (இந்தியா) 84.00 -0.34
ஐநாக்ஸ் விண்ட் 80.72 -0.23
ஆர்.பி.எல்., பேங்க் 314.60 -3.55
பந்தன் பேங்க் 149.22 -3.36
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
அனந்த் ராஜ் 458.00 2.45
ராலீஸ் இந்தியா 253.10 11.08
ஷிப்பிங் கார்ப்போரேஷன் ஆப் இந்தியா 232.95 0.19
டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் 1,059.60 4.40
விப்ரோ 204.60 7.31