'பவரிகா' பங்குகளை வாங்கியது எஸ்.பி.ஐ., பண்டு
'ப வரிகா' நிறுவனத்தின் ஐ.பி.ஓ., வெளியீட்டின் போது, 'எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு' நிறுவனம் 57.92 லட்சம் புதிய பங்குகளை வாங்கியது.
இதற்கு முன்பே அந்நிறுவனத்தின் 25.57 லட்சம் பங்குகளை எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு வைத்திருந்தது. தற்போது வாங்கிய கூடுதல் பங்குகளையும் சேர்த்து, எஸ்.பி.ஐ.,யிடம் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை 83.49 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதாவது, 'பவரிகா' நிறுவனத்தின் மொத்த பங்குகளில், எஸ்.பி.ஐ.,யின் பங்கு 6.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை ஒரு நிறுவனம் வாங்கும் போது, அது குறித்து 'செபி'யிடம் முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்பதால் இந்த விபரங்களை தற்போது செபியிடம் எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனம் சமர்ப்பித்திருப்பதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement