திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் மகா கும்பாஷேகம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அடுத்த திருவதிகையில் 1400 ஆண்டு கால பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் திருப்பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 4 ம் தேதி பகவத் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, சாற்றுமுறை நடந்தது. நேற்று முன்தினம் காலை கும்ப ஆராதனைம், மகா சாந்தி ஹோமம், நவ கலச அதிவாசம், மகா சாந்தி திருமஞ்சனம், மாலை பிரதான ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது.
நேற்று காலை 6:30 மணிக்கு சுப்ரபாதம்,கோ பூஜை, காலை 9:00 மணிக்கு கடம்புறப்பாடாகி, காலை 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் சேஷ வாகனத்தில் திருவிதியுலா நடந்தது.
விழாவில் தொழிலதிபர்கள் அருள், சரவணன், ஜெ.கே.ஆர்.டெகஸ் ரமேஷ், ஆடிட்டர் தியாகராஜன், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், குமாரசாமி கெமிக்கல் கார்த்திக், மீனா ஜீவல்லர்ஸ் தேவராஜ், தேவநாதன், சூர்யா ஜீவல்லர்ஸ் விஜய், உள்ளிட்ட ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்