பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: ''பார்லியில் எம்பிக்கள் தங்கள் தொகுதி, மாநில மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்குக் கூட போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை'' என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: பிரதமர் மோடி தலைமையிலான தேஜ அரசு பார்லிமென்டின் அடிப்படை அமைப்பையே திட்டமிட்டுச் சீர்குலைக்கிறது. விவாதங்களுக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் பதில் கூறுவதற்குமான தளமாக இருக்க வேண்டிய பார்லியில் எம்பிக்கள் தங்கள் தொகுதி, மாநில மக்களின் பிரச்னைகளைப் பேசுவதற்குக் கூட போதிய நேரமளிக்காத வெற்றுச் சம்பிராதய அவையாகச் சுருக்கப்பட்டு வருகிறது.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவு, “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற அவர்களின் சொந்த முழக்கத்துக்கே எதிரானதாக அமைந்துள்ளது. இந்த முடிவினால் செலவுதான் கூடும், மக்களின் வரிப்பணம் வீணாகும், பார்லிமென்ட் செயல்பாடுகளின் தரம் குறையும்.
எல்லை மீறலாகும்
மேலும், இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாக வரையறுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 1க்கும் இது எதிரானது. மாநிலங்களின் குரலைப் புறக்கணித்துவிட்டு, முறையான கலந்தாலோசனையும் செய்யாமல் தவிர்த்துவிட்டுச் செயல்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் ஒற்றைத்துவ எல்லைமீறலாகும்.
இதற்கெல்லாம் மேலாக, இந்தத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பாஜ ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு ஆதரவாக வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். சித்தராமையா சீற்றத்தோடு கூறியதுபோல, இது நடுநிலையான நடவடிக்கை அல்ல, இது அரசியல் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கட்டமைப்பு மாற்றம்.
இருமடங்காகும்
வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இருமடங்காகும் அதேவேளையில் தென் மாநிலங்களின் அளவு 24 சதவீதத்திலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும். இந்த நடவடிக்கையால் கூட்டாட்சி சிதைக்கப்பட்டு, அதிகாரம் ஒருசில பகுதிகளில் மட்டுமே குவிக்கப்படும் சித்தராமையா, பினராயி விஜயன் மற்றும் ரேவந்த் ரெட்டி ஆகிய தென் மாநில முதல்வர்கள் மிகச்சரியாக எச்சரித்துள்ளனர்.
இது அவசரகதியில் தற்போது செய்யப்படுவதும் நம் அச்சத்தை அதிகமாக்குகிறது. பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய முக்கிய நடவடிக்கையை மாநிலத் தேர்தல்களுக்கிடையே திணிக்க வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் சார்ந்த கதையாடல்களை வடிவமைக்கவும், பெண் வாக்காளர்களிடம் செல்வாக்கு பெறுவதற்காகவும் 2024 பார்லிமென்ட் லோக்சபா பொதுத்தேர்தலின்போது செய்த முந்தைய முயற்சிகளைப் போலவே இதுவும் அமைந்துள்ளது.
33% இட ஒதுக்கீடு
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால், பொறுப்போடு செயல்பட்ட மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்காமலேயே, அதை நடமுறைப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம். அவர்களின் நோக்கம் உண்மையானதாக இருந்தால், இப்போதுள்ள தொகுதி அளவிலேயே மகளிருக்கான 33 இட ஒதுக்கீட்டை வழங்குவதை எதுவும் தடுக்கவில்லையே?
இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கு ஆதரவான சமூகநீதிக் காவலர் என்று மத்திய அரசு தங்களை அழைத்துக்கொள்வதும் வெற்று முழக்கம்தான். 'வளர்ந்த இந்தியா' என ஒருபுறம் சொல்லிக்கொண்டே பல ஆண்டுகளாகக் கிரீமி லேயர் உச்சவரம்பை 8 லட்சம் ரூபாயில் இருந்து மாற்றாமல் வைத்திருந்து ஓ.பி.சி. மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கீடு கிடைக்காமல் வஞ்சித்தார்கள்.
தொகுதி மறுவரையறை
இதர பிற்படுத்தப்பட்ட மகளிரின் பிரதிநிதித்துவத்துக்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் முதல்முறையாக நாம் அறியவுள்ள ஜாதிவாரி எண்ணிக்கை முடிவுகளைக் கூட பரிசீலிக்காமல் அவசரமாக அவர்கள் செயல்படுவது இதில் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை அம்பலப்படுத்துகிறது.
இது அதிகாரமளித்தல் அல்ல, புறக்கணிப்புக்கு மாறுவேடம் போட்டுச் சீர்திருத்தம் என்கிறார்கள். மேலும், தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாகக் கொள்ளப்போவது எது என்பதிலும் கொஞ்சம் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா அல்லது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முந்தைய காலமான 1971ம் ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா?
கூட்டாட்சி
மாற்றி மாற்றிப் பேசுவதும், வெற்று உத்தரவாதங்களும் நம் ஐயத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. மொத்தத்தில் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றும், சட்டசபைகளை விரிவாக்கம் செய்ய அல்லது புதிதாகக் கட்டும் நிலைக்குத் தள்ளும். இவை அனைத்தும் முறையான கலந்தாலோசனை எதுவுமின்றி நடக்க இருக்கிறது. இது கூட்டுறவுக் கூட்டாட்சியியல் மீதான நேரடித் தாக்குதல் ஆகும்.
இவர்கள் செய்ய நினைப்பது சீர்திருத்தமே அல்ல, இது அதிகாரத்தை ஓரிடத்தில் குவித்து, பார்லிமென்டை பலவீனப்படுத்தி, தென்னகத்தை விளிம்புநிலைக்குத் தள்ளி, சமூகநீதியைச் சிறுமைப்படுத்துவதற்கான தன்னிச்சையான அரசியல் சதித் திட்டம். ஏன் இந்த அவசியமற்ற அவசரம்? ஏன் மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? இதனால் உண்மையாகப் பயனடையப் போவது யார்? எனும் கேள்விகளுக்கு நாட்டு மக்கள் முறையான விளக்கத்தைக் கோருகிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Inga sattamandrathula neenga enna sir pannenga, unga velai ellam makkalukku theriyathu endru ninaikirirgala Mudhalvar avargalae???
அட ....தமிழக சட்டசபையில் எதிர்கட்சி MLA கள் pess இவர்கள் நேரம் ஒதுக்கினார்களா ?
நாடு மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட தாற்காலிக அமைப்புகளே.
பார்லியில் தேச நலன் சார்ந்த உருப்படியான விஷயத்தை பேசினால் நேரம் ஒதுக்குவார்கள். உன் ஆளுங்க அங்க தகராறு பண்றதுக்குன்னே போறாங்களே. வீண் வெட்டி பேச்சுக்கு நேரமெல்லாம் ஒதுக்க மாட்டாங்க.
அதை சொல்லவேண்டியது அந்த எம்பிக்கள் -
இவர்கள் சட்டசபையில் எதிர்க்கட்சி MLA களுக்கு செய்வதைதான் அவர்கள் நாடாளுமன்றத்தில் MP களுக்கு செய்கிறார்கள். முதலில் கண்ணாடியில் முகத்தை பார்த்து கொள்ள வேண்டும்
நேரம் ஒதுக்கும் நேரத்தில் நமது பகுத்தறிவாளர்கள் பஜ்ஜி சாப்பிட கேண்டீனில் ஒதுங்கிவிடுகிறார்கள். சாட்டையை சுழற்றலாமென்றால் சாட்டையை கரையான் தின்றுவிட்டது எழுதிக்கொடுப்பதில் ஏதாவது உண்மையிருக்கிறதா என கேட்டாவது தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அப்பா.
This DMK is fit for nothing, tell this stalin to come and speak one proper thing, he'll cry waste idiot ruling Tamil Nadu
உங்களுக்கு நேரம் கொடுத்தால் உங்க கொத்தடிமைகள் பார்லிமென்டில் கூடி உங்கள் நை நா, நைனாவின் வாரிசு புகழ் படுவதும் கைதட்டுவதும்தான் உங்கள் M P செய்து கொண்டிருக்கிறார்கள்
பார்லிமென்ட்ல கலாட்டா பண்ணவே நேரம் பத்தலை. இதுல பேசரதுக்கு நேரம் எங்க இருக்கு. பொய்யானாலும் பொருந்த சொன்னால்தான் அழகு.மேலும்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்