கிருஷ்ணராயபுரம் தி.மு.க., வேட்பாளர் சி.கே.ராஜா வேட்புமனு தாக்கல்
கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் சி.கே., ராஜா நேற்று தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதில், தி.மு.க., வேட்பாளர் சி.கே.ராஜா, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் பகுதிகளில் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், படை சூழ மாட்டு வண்டியில், கரூர், திருச்சி நெடுஞ்சாலை வழியாக, ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார்.
பின்னர், தி.மு.க., வேட்பாளர் சி.கே., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதல்படி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் சார்பில் செய்யப்பட்ட நலத் திட்டங்களை கூறி, ஓட்டு சேகரித்து வருகின்றோம். கடந்த ஒரு வாரமாக, பல பஞ்சாயத்து
களில் உள்ள, 250 ஓட்டுச்சாவடி பகுதிகளில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. அப்போது போது மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கியுள்ளனர். குறிப்பாக பெண்கள் மீண்டும், தி.மு.க., ஆட்சியே அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர, மீண்டும் தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும். இந்த தொகுதியில் மக்கள் ஆதரவுடன், 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாம
சுந்தரி, முன்னாள் எம்.எல்.ஏ., பி.காமராஜ், மாவட்ட துணை செயலர் ரமேஷ், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் ரவிராஜா, ரகுநாதன், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து நகர செயலர் சசிகுமார், வி.சி.க., ஒன்றிய செயலர் மகாமுனி உள்பட கூட்டணி நிர்வாகிகள் பலர்
பங்கேற்றனர்.
மேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்