என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
காட்பாடி : ''என் வயது முதிர்வு குறித்து விமர்சித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, என்னுடன் நடை போட்டிக்கு வர தயாரா?'' என அமைச்சர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் அமைச்சர் துரைமுருகன் 11வது முறையாக போட்டியிடுகிறார். அவர், நேற்று தன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின், துரைமுருகன் அளித்த பேட்டி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'அமைச்சர் துரைமுருகனுக்கு வயதாகி விட்டது; அவரால் நடக்கவே முடியவில்லை. அதிக முறை வென்றவர் என்ற பெருமைக்காக துரைமுருகன் போட்டியிடுகிறார்; ஒவ்வொரு முறையும் இது தான் என் கடைசி தேர்தல் என்கிறார்' என, என்னை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
பழனிசாமி வழக்கமாக பேசும் பொய்களில் இதுவும் ஒன்று. வேண்டுமானால் பழனிசாமியை என்னோடு நடை போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்ப்போம்; எனக்கு மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை நீங்களே வந்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@ நல்ல நேரத்திற்கு காத்திருப்பு
காட்பாடி தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை 11:40 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் வந்தார். நேற்று பகல் 12:00 மணி வரை எமகண்டம் என்பதால் நல்ல நேரம் கிடையாது. எனவே, வேட்பு மனுவில் கையெழுத்திட, நல்ல நேரத்திற்காக துரைமுருகன் காத்திருந்தார். பின்னர், எமகண்டம் முடிந்ததும், 12:00 மணிக்கு பின், வேட்பு மனுவை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார்.block_B
@block_P@ ரூ.74.16 கோடி சொத்து
துரைமுருகன் தன் வேட்பு மனுவில், 'என் பெயரில், 74.16 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன; கடனாக 15.31 கோடி ரூபாய் உள்ளது; ஒன்பது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன' என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில், 30.80 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக துரைமுருகன் தெரிவித்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
துரைமுருகனிடம் 26.34 லட்சம் ரூபாய்; மனைவி சாந்தகுமாரியிடம் 25.57 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளதாகவும், துரைமுருகனிடம் 500 கிராம் தங்கம்; அவர் மனைவியிடம் 2,224 கிராம் தங்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.block_P
சும்மா ஜோக் அடிக்காதீங்க துரைமுருகன் சார் சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் வடிவேலை பார்த்து சொன்ன ஜோக்குதான் ஞாபகத்திற்கு வருகிறது
பாஸ் அப்படியே ஊழல் செய்வதற்கும், கொள்ளையடிப்பதற்கும் என்னுடன் போட்டி போட முடியுமா? என்று கேளுங்கள்.மேலும்
-
சட்டம் ஒழுங்கு சரியில்லை என வாட்ஸாப்பில் அவதுாறு; கனிமொழி புகார்
-
நவீன வசதியுடன் கூடிய வாகனம் :தீயணைப்பு துறையினர் மகிழ்ச்சி
-
மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா:பக்தர்கள் எதிர்பார்ப்பு
-
திருப்புத்துார் தொகுதி மக்களின் தேவைகள் எதிர்பார்ப்பு வேட்பாளர்களின் வாக்குறுதிகளாக மாறுமா
-
பாக்., பல துண்டுகளாக சிதறும்: அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை
-
மின் உற்பத்தி நிலையங்களை பாதுகாக்க மனித சங்கிலி அமைக்க வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு