பாக்., பல துண்டுகளாக சிதறும்: அமைச்சர் ராஜ்நாத் எச்சரிக்கை
புதுடில்லி: ''எங்கள் மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும்,'' என, அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப்புக்கு நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள் தகர்த்தன.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நம் நாட்டின் எல்லைப் பகுதிகளில் பாக்., நடத்திய தாக்குதல்களை நம் படைகள் முறியடித்தன. நம் தாக்குதலை சமாளிக்க முடியாத பாக்., கெஞ்சியதை அடுத்து சண்டை முடிவுக்கு வந்தது.
சமீபத்தில், பாகிஸ்தானின் சியால்கோட்டில், அந்நாட்டின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், 'எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் சும்மா இருக்க மாட்டோம். எல்லையில் மட்டுமின்றி கொல்கட்டா வரை தாக்குதல் நடத்துவோம்' என்றார்.
இதற்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது: பாகிஸ்தானின் இத்தகைய துாண்டுதல் பேச்சுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அந்நாடு தவிர்க்க வேண்டும்.
பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இது போல பேசியிருக்கக் கூடாது. 55 ஆண்டுகளுக்கு முன், பாக்., இரண்டாக பிரிந்த போது, அதன் விளைவுகளை அந்நாடு அனுபவித்தது. இந்த முறை மேற்கு வங்கத்தின் மீது கை வைக்க முயன்றால், அந்நாடு எத்தனை துண்டுகளாக சிதறும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
07 ஏப்,2026 - 22:38 Report Abuse
தேர்தல் வரப்போ லாம் இருக்கவே இருக்கு பாகிஸ்தான் ....தைரியம் இருந்த சீனா வை இந்தமாரி பேசுவார்களா பக்தஸ் ? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 ஏப்,2026 - 21:21 Report Abuse
இப்ப மட்டும் என்ன வாழுது. பாகிஸ்தான் இப்பவே அவர்கள் பாலூட்டி வளர்த்த தீவிரவாதிகளால் பல துண்டுகளாக சிதறித்தான் கிடக்குது. 0
0
Reply
Sri Kumaran - ,
07 ஏப்,2026 - 21:17 Report Abuse
jai sri ram 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
07 ஏப்,2026 - 21:01 Report Abuse
இதுபோன்ற பேசிய பேச்சிர்க்கே பாகிஸ்தானிமீது ஒரு எச்சரிக்கை குண்டு வீசினால் நல்லது தவறே இல்லை நம்மை சீண்டி பார்ப்பவர்களை நாம் அடக்க வேறு வழியே இல்லை 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
07 ஏப்,2026 - 20:55 Report Abuse
முதலில் அதை செய்யுங்க 0
0
Reply
சுந்தர் - ,
07 ஏப்,2026 - 20:45 Report Abuse
நெத்தியடி. 0
0
Reply
மேலும்
-
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர்... 91 லட்சம்!: இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள்
-
சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
-
நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மஹாராஷ்டிராவில் அறிமுகம்
-
விமான எரிபொருள் விலை உயர்வால் எகிறியது 'ஏர் இந்தியா' டிக்கெட் கட்டணம்
-
பல மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய மகளிர் கழிப்பறைகள் இல்லை
Advertisement
Advertisement