திருப்புத்துார் தொகுதி மக்களின் தேவைகள் எதிர்பார்ப்பு வேட்பாளர்களின் வாக்குறுதிகளாக மாறுமா
திருப்புத்துார்:திருப்புத்துார் தொகுதியில் முக்கிய ஒன்றியமான திருப்புத்துாரில் பல அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் இப்பகுதி எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை.அடுத்த 5 ஆண்டுகளில் திருப்புத்துார் பகுதி வளர்ச்சிக்காக கூடுதல் திட்டப்பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
குடிநீர் மேம்பாடு:
-------------------
திருப்புத்துார் ஒன்றியக் கிராமங்களில் பெரும்பாலும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு எனப்படும் ‛ஜல் ஜீவன்' திட்டம் நிறைவேற்றப்பட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் உள்ளது. குடிநீர் அபிவிருத்தித் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் திருப்புத்துார் நகரில் தினசரி குடிநீர் விநியோகத்தை அமல்படுத்த வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இருவழிச்சாலையாக்குதல்: ---------------------------
இப்பகுதியில் சாலை வசதிகளும் பெரும்பாலான கிராமங்களுக்கு உள்ளது. ஆனால் போதிய பராமரிப்பின்றி உள்ளன. கிராமச் சாலைகளையும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிக்க கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர். ஒன்றியத்திற்குள் முக்கிய கிராம மையங்களை இணைக்க இருவழிச்சாலை அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். கீழச்சிவல்பட்டி,-கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர்,-கண்டரமாணிக்கம், தென்கரை, நாச்சியாபுரம்-,கண்டரமாணிக்கம், கண்டவராயன்பட்டி-ஆ.தெக்கூர், கண்டவராயன்பட்டி-கே.வைரவன்பட்டி காட்டாம்பூர்- ரணசிங்கபுரம், திருவுடையார்பட்டி -காரையூர், மகிபாலன்பட்டியிலிருந்து கண்டவராயன்பட்டி, நெற்குப்பை,வேலங்குடி போன்ற இணைப்பு ரோடுகளை முழுமையாக இருவழிச்சாலைகளாக மேம்படுத்த வேண்டும். நகருக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிசாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.
நிரந்தர பாசன வசதி
---------------------
இப்பகுதியின் முதன்மையான தொழிலான விவசாயத்தை மேம்படுத்த நிரந்தர பாசன வசதியை உறுதிபடுத்த வேண்டும். திருப்புத்தூர் ஒன்றியத்தை காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டத்தில் சேர்க்கவும், அழிந்து போன திருப்புத்தூர் பெரியகண்மாய்க்கு வரும் பெரியாறு மேம்பாடுத் திட்ட வாய்க்காலை புனரமைத்து நீர்வரத்திற்கு நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புத்துார் வருவாய் கோட்டம் அமைத்தல்,--------------------------------------------- திருப்புத்துார் தாலுகாவிலிருந்து சிங்கம்புணரி தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பின், இரு தாலுகாக்களுக்கும் கோட்ட அலுவலகம் திருப்புத்துாரில் துவக்க கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், திருப்புத்துார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தவும், நகரில் கழிவுநீர் அகற்ற நவீன வடிகால் மற்றும் சுத்திகரிப்பு வசதி ஏற்படுத்தவும், குப்பைகளை உரமாக்க புதிய இடத்தில் உரக்கிடங்கு துவங்கவும், திருப்புத்துார் கோர்ட்டில் முன்சீப் கோர்ட் துவங்கி திருப்புத்துார்,சிங்கம்புணரி மக்களுக்கு சிவில் வழக்குகளுக்கு முறையிட வசதி ஏற்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெற்குப்பையில் சார் பதிவாளர் அலுவலகம் ----------------------------------- நெற்குப்பை பேரூராட்சி அந்தஸ்திலான நகர். இங்கு சார்பதிவாளர் அலுவலகம் துவக்க இப்பகுதியினர் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பக்கத்து மாவட்டத்திற்கு பத்திரப்பதிவு செய்ய செல்ல வேண்டிய நிலை மாறும். இந்த மக்களின் எதிர்பார்ப்புகள் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
ஏர் இந்தியா சி.இ.ஓ., கேம்பெல் வில்சன் விலகல்
-
போரால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு ரூ.2.50 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்; மத்திய அரசு பரிசீலனை
-
முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4% சரிவு
-
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு.. தீர்வு வருமா?. இடத்தை அளவிட குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.45 கோடியில் குடிநீர் திட்டத்தை முதல்வர் திறந்தும்.. பயனில்லை! 9 ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
-
சொந்த கட்டடமின்றி பள்ளி மாணவியர்.. தவிப்பு! . இடத்தை கல்வி துறைக்கு மாற்ற இழுபறி