மானாமதுரையில் ஏப். 21ல் சித்திரை விழா துவக்கம்: வைகை சுத்தப்படுத்தப்படுமா:பக்தர்கள் எதிர்பார்ப்பு
மானாமதுரை:மானாமதுரையில் வரும் 21ம் தேதி சித்திரை திருவிழா துவங்க உள்ள நிலையில் வைகை ஆறு சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் போது கோயிலுக்கு எதிரே உள்ள வைகை ஆற்றில் ராட்டினங்கள், கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது வரை வைகை ஆற்றில் சுத்தம் செய்யும் பணி துவங்கப்படாமல் உள்ளது.
பக்தர்கள் கூறியதாவது:
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா போன்றே மானாமதுரையிலும் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். திருக்கல்யாணம், தேரோட்டம்,வைகை ஆற்றில் அழகர் இறங்குதல், நிலாச்சோறு போன்ற நிகழ்ச்சிகளின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் ஒன்றாக சேர்ந்து விழாவை கொண்டாடும் நிலையில் வைகை ஆற்றில் எங்கு பார்த்தாலும் நாணல் செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்து ஆங்காங்கே கழிவுநீர் ஓடி மோசமான நிலையில் உள்ளது. சுத்தம் செய்யும் பணியை நகராட்சி நிர்வாகத்தினர் இன்னும் துவங்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றை சுத்தம் செய்யும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர்... 91 லட்சம்!: இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள்
-
சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
-
நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மஹாராஷ்டிராவில் அறிமுகம்
-
விமான எரிபொருள் விலை உயர்வால் எகிறியது 'ஏர் இந்தியா' டிக்கெட் கட்டணம்
-
பல மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய மகளிர் கழிப்பறைகள் இல்லை