சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
பெலகாவி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பெலகாவி மாவட்டம் கசாயிகல்லியில் வசிப்பவர் இம்ரான் சவுத்ரி, 29. இவர் அதே பகுதியில் வசிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக நாடகமாடி, வலையில் விழ வைத்தார். சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக, பல முறை அவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விபரம், சிறுமி கர்ப்பமடைந்த பின்னரே, அவரது தாய்க்கு தெரியவந்தது. உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நடவடிக்கை எடுத்த போலீசார், இம்ரான் சவுத்ரியை கைது செய்தனர். விசாரணையை முடித்து, பெலகாவி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நீதிமன்ற விசாரணையில், வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி புஷ்பலதா, ''குற்றவாளி செய்த குற்றம் மிகவும் கொடுமையானது,'' என கருத்து தெரிவித்து, இம்ரான் சவுத்ரிக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 சரிவு
-
கேரளா, புதுச்சேரி, அசாமில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
-
தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே: விறுவிறு அரசியல் செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
சீர்காழியில் முதல்வர் ஸ்டாலின்; நடைபயிற்சியில் ஓட்டு சேகரிப்பு
-
8,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்காத கல்வித்துறை; மாணவர்கள் பாதிப்பு
-
எமகண்டம் முடியும் வரை காத்திருந்து மனு தாக்கல் செய்த துரைமுருகன்