அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், பல்வேறு அமைப்பிகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை சந்தித்த தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சங்கத்தினர், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக உருது முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட 8 முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளின் சந்தித்து பேசினர். அப்போது, தமிழக அரசின் தலைமை காஜி நியமன விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கையில் ஏற்பட்ட அதிருப்தியை அவரிடம் வெளிப்படுத்தினர்.
அதாவது, தமிழகத்தில் மொத்தம் 3 சதவீதம் உள்ள முஸ்லிம் மக்கள் தொகையில், பெரும்பான்மையாக 2.3 சதவீதத்துடன் சூபி சன்னி பிரிவினர் இருந்து வரும் நிலையில், சூபி அல்லாத சன்னி முஸ்லிம்களில் இருந்து ஒருவரை தலைமை காஜியாக நியமித்ததற்கு தங்களவு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முஸ்லிம்களின் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட ஒரு பிரிவினர் ஆதரவு அளிப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
இதுவும் நமது நிருபரின் கற்பனையோ.... அல்லது கனவோ.. .. ஏதுவாக இருந்தாலும் அது நடக்காது....
பழனி திருநீறு வைக்காமல் திரிந்ததற்கு கிடைத்த பலனோ ????
இங்க இமாம், சர்ச் பாதர் எல்லோரும் விஜய்க்கு ஓட்டு போட சொல்லிட்டாங்கலாம், திமுக தர்மபுரி ல தோற்பது உறுதி, இன்னைக்கு சிறப்பு தொழுகை ஆச்சா?
சன்னி முஸ்லிம்களில் சுஃபி பிரிவு வராது...சூஃபி சித்தாந்தத்துக்கு எதிராக வன்மையாக நிற்பது சன்னிகளே...
எந்த பக்கம் காற்று வீசுகிறது என்பதை உணர்ந்து சந்தர்ப்ப வாத அரசியல் இது. இல்லை விட்டால் இவர்களது வியூகம் எப்போதுமே பாஜக எதிர்ப்பு கன்ஸாலிடேஷன் அரசியல் தான்
மொத்த இசுலாமிய சமூகத்தில், NDA க்கு ஆதரவு தெரிவிக்கும் இவர்கள் எத்தனை சதவீதம் என்பது தான் முக்கியம்.
“சிவகாமி ஜோசியம் சொல்லிட்டா... கண்டம் கண்டம்தான்” அப்படீன்னு விவேக் காமெடி வசனம் மாதிரி... கண்டம் கண்டம்தான்... இந்த உலகமகா நடிப்புக்கு எல்லாம் சிறுபான்மையினர் மயங்கிடமாட்டாங்க...? குடியுரிமைத் திருத்தச் சட்டம் CAA சட்டத்தின் போது நீங்கள் நடந்து கொண்ட நிகழ்வுகள் இந்த சிறுபான்மையினர் கண் முன்னாடி வந்து வந்து போவுமில்ல....?
உன்னை போன்ற தேசத்துரோகி இந்த மண்ணில் பிறந்தது ஒரு சாபக்கேடு...
சொம்பு கானோஜ் எதுக்கு பொங்குறே
முரசொலி அடிமை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். CAA பாக்கிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து அங்கு வாழமுடியாமல் வந்த/ வரும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள். சீக்கியர்கள், பௌத்தர்கள் போன்றவர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கும் சட்டம். இந்திய முஸ்லீம் சமூகத்தினரை தற்குறிகளாக நடத்தும் திருட்டு திராவிடக்கும்பலின் வேலை
ஸ்டாலினுக்கு இருந்த அரசு ஊழியர், சிறுபான்மை வாக்கு எல்லாம் காலி
நல்ல முடிவு .வாழ்த்துக்கள்மேலும்
-
தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் மாற்றம்
-
பாஜவுக்கு தொடர்பில்லை; முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போடுங்க; ஜனநாயகன் லீக் விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்
-
கேள்வி கேட்டவரை 'லூசு' என திட்டிய திமுக வேட்பாளர்; அண்ணாமலை கண்டனம்
-
மாநில முதல்வர்கள் முட்டிக்கொள்ளும் முதல் தேர்தல்: புது ‛‛டிரெண்ட்'' பேச்சு; நாகரீகம் போச்சு!!
-
தர்மபுரியில் அதிர்ச்சி: திமுக நிர்வாகியிடம் ரூ.8 ஆயிரம் கூப்பன்கள், கிப்ட் டோக்கன்கள் பறிமுதல்
-
பார்லி வளாகத்தில் பிரதமர் மோடி, ராகுல் பேசியது என்ன?