நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
ஊட்டி: நீலகிரி எம்.பி., ராஜா, அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
@1brஊட்டியில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
நமது கூட்டணி ஒற்றுமையாக ஒரு அணியில் நிற்கிறோம். தமிழக வெற்றிக்கழகம் மறறும் சீமான் களத்தில் இருக்கின்றனர். ஆனால் போட்டி என்றால், இருமுனை போட்டியாக தான் இருக்கிறது. ஒன்று ஆளும் திமுக, மற்றொன்று இதற்கு முன் ஆட்சியில் இருந்து மறுபடியும் ஆட்சிக்கு வர போகிற அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி.
முதல்வர் ஸ்டாலின் தவறான நோக்கத்தில் பேசுகிறார். உதராணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஒன்று சொன்னார். அதனை கனிமொழி திரித்து, நாங்கள் எல்லாம் எங்களை யாராவது எதிர்த்து பேசினால், மலர்வளையம் வைக்கும் குடும்பம் என்று சொல்கிறார். இது எல்லாம் மிரட்டல் இல்லையா?
இபிஎஸ் சொல்லும் கருத்தை கருத்தாக பேசுங்கள், அதற்காக மலர்வளையம் வைப்போம் என்றால் என்ன அர்த்தம். பேச்சில் ஒரு முறை இருக்க வேண்டும். இபிஎஸ் பற்றி உதயநிதி பேசுவது தரக்குறைவான, ஆபாசமான பேச்சு தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் மாற்றி, சொல்கிறார். யாரும் யாரையும் எதையும் செய்ய முடியாது, எதுவும் செய்ய போவதும் இல்லை.
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தேன் என்பது பற்றி தான் முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டும். அதை விட்டு மண்ணில் புதைக்கிறார்கள், அங்கு புதைக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நட்சத்திர பேச்சாளராக இருக்கும் ராஜா இதுவரை திமுக கூட்டத்தில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை.
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோ வெளியிட்ட பிறகு அதை திமுக தலைவர்கள் மறுத்து இருந்தாலும் கூட, அது ராஜா பேசிய ஆடியோ தான். அந்த ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை. அரசியல் தெரிந்த அனைவருக்கும் அது தெரியும். இந்த தொகுதியின் எம்பியாக இருந்தாலும் கூட ராஜாவை பிரசாரத்திற்கு கூட வர முடியாமல் முடக்கி வைத்து இருக்கிறார்கள்.
ராஜா பேசிய கருத்தை தமிழக மக்கள் எல்லோரும் இன்று தெரிந்து கொண்டார்கள். அவர் முதல்வரின் திறனை பற்றி சொல்லி இருக்கிறார். நாங்கள் தொடர்ந்து சொல்வதை திமுகவின் மூத்த தலைவரே ஊர்ஜிதம் செய்து இருப்பது இந்த தேர்தல் நேரத்தில், இன்னும் எங்கள் பிரசாரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
நீலகிரி எம்.பி., ராஜா, அந்த ஆடியோவில் பேசியது என்ன தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
வாசகர் கருத்து (10)
Barakat Ali - Medan,இந்தியா
10 ஏப்,2026 - 14:40 Report Abuse
கோவிச்சுக்குவார்ன்னு பயந்து பேசலன்னு சொல்ட்டாரே ???? 0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
10 ஏப்,2026 - 14:00 Report Abuse
எங்களுக்கு அதெல்லாம் தெரியாது.. காதுகூட செவிடு.. நாங்கள் மானமே கெட்டவர்களாக இருப்பதால் மானமே கெட்ட திமுகாவுக்குத்தான் எங்கள் ஓட்டையும் போடுவோம்.. இப்படிக்கு தமிழக மானமே கெட்ட மக்கள்.. 0
0
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10 ஏப்,2026 - 15:14Report Abuse
மாற்றிச் சொல்லுங்க பாஸு...மானம் மட்டுமே கெட்ட தமிழக மக்கள்... இங்கு தான் மானம் மரியாதை பற்றிய கவலையெல்லாம் கிடையாதே? திராவிட ஆட்சியில் மானமா? மரியாதையா? அதெல்லாம் அகராதியிலேயே கிடையாது...யாரிடம் உள்ளது மானம்..மரியாதை? ஹ....கட்டபொம்மன் ஸ்டைலில் படிக்கவும் 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
10 ஏப்,2026 - 12:54 Report Abuse
எப்படி மோடி சொன்ன AIIMS மாதிரியா இதன் கூட அறிவித்த AIIMS எல்லாம் வந்து 4 வருடம் ஆகுது இதற்கு எல்லாம் நிதி ஒன்றிய அரசிடம் இருந்து ஆனால் நாம் ஜப்பான் சென்று கடன் வாங்கிக்க வேண்டுமாம் , இவர்களை கண்டு கொள்ளுங்கள் இவர்களால் TN க்கு ஒரு நன்மையும் இல்லை 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
10 ஏப்,2026 - 12:53 Report Abuse
சிரிப்பு போலீஸ் இது தேவையா, பார்லிமென்ட் தேர்தல் கோவைக்கு 100 நாட்கலில் 500 திட்டங்கள் என்று சொன்ன ஒரு திட்டம் கூட இல்லையே இதை பேசு அடுத்தவன் உட்கட்சி பேசி இதை எல்லாம் மறைக்க பார்க்காதே , 0
0
Reply
கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா
10 ஏப்,2026 - 12:38 Report Abuse
அவர் பேசியது உண்மையா... பொய்யா...ன்னு உன்னை யாரும் கேக்கலையே...? அப்படியே பேசினாலும், அவர் கட்சித் தலைவரைத்தான் பேசினார்... உங்களைப் பற்றியோ, உங்க கட்சித் தலைவரைப் பற்றி பேசியிருந்தால், நீங்க பேசத் தகுதியுள்ள ஆள்...? 0
0
Murugesan - Abu Dhabi,இந்தியா
10 ஏப்,2026 - 12:59Report Abuse
உருட்டு திராவிட ஊபி ,ராஜா 176000 கோடி ஊழல் பணத்தில் கலைஞர் டிவிக்காக ஸ்டாலின் வாங்கியதையும் அதற்காக இவர் சிறையில் இருந்ததை பேசியுள்ளது , அதை கேட்க வக்கில்லையா 200 ரூ அலைகிற 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 15:08Report Abuse
முருகேசனுக்கு டபுள் அபாளாஸ்.திருட்டு திராவிடன்களை தோலுரிச்சதுக்கு. 0
0
guna - ,
10 ஏப்,2026 - 15:31Report Abuse
ஏம்பா கானோஜ் இப்போ உன்னை எவன் கருத்து கேட்டான்...உண்மைய சொன்னா பொங்குறே 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
10 ஏப்,2026 - 17:49Report Abuse
குணாவுக்கு டபுள் அப்ளாஸ். இந்த ரூவா 200 கேஸ தோலுரிச்சதுக்கு. இன்னும் நல்லா உரிச்சிருக்கணும். ஏன் இத்தோட உட்டுப்புட்டீக. 0
0
Reply
மேலும்
-
இணையத்தில் ஜனநாயகன் திரைப்படம்: ரஜினி வேதனை
-
எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்
-
எந்தெந்த தடங்களில் மினி பஸ்கள் தேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு
-
தில்லை கங்கா நகரில் மேம்பாலம் அமைக்கப்படும்: அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் வாக்குறுதி
-
விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
-
அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தேதி மாற்றம்
Advertisement
Advertisement